பிப்ரவரி 24, 2021, 11:03 மணி புதன்கிழமை
More

  மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று!

  Home சற்றுமுன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று!

  மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று!

  மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

  nitin-gadkari
  nitin-gadkari

  மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

  மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான நிதின் கட்கரி (வயது 63) இன்று தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ள தகவலில், நேற்று தாம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மிகவும் சோர்வாக இருந்ததாகவும், அது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொண்டதாகவும், அப்போது பரிசோதனை மேற்கொண்டதில் தமக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது தெரியவந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

  தமது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் அனைவருடைய ஆசிகள் மற்றும் வேண்டுதல்களால் தாம் நலமுடன் இருப்பதாகவும், கொரோனா பாதிப்பு விதிகளுக்கு உட்பட்டு தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

  மேலும் தம்முடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்திக் கொண்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கொரோனா கால விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

  இதை அடுத்து பலரும் அவருக்கு ஆறுதலும் தைரியமும் தெரிவித்து, அவர் விரைவில் பூரண நலம் பெற்று வரவேண்டும் என்று பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெல