― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கற்கத் தரும் வாழ்க்கை ரகசியம் என்ன?!

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கற்கத் தரும் வாழ்க்கை ரகசியம் என்ன?!

- Advertisement -

ஹாப்பி பர்த்டே நரேந்திர மோடி ஜி!
இந்தியப் பிரதம மந்திரி நரேந்திர மோடி செப்டம்பர் 17ஆம் தேதி 1950ம் ஆண்டு பிறந்தார்.

நாம் நம் பிரதமரின் எழுபதாவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறோம். எழுபதாவது வயதில் அடி எடுத்து வைக்கும் மோடி 25 வயது இளைஞனைப் போல மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார்.

இப்போதுகூட இளைஞர்களுக்கு ஆரோக்கியம், யோகா, தியானம், ஃபிட்னெஸ், டயட் குறித்து சவால் அளிக்கும் விதமாக நடந்துகொள்கிறார். அவர் தன்னுடைய டயட் அண்ட் பிட்னெஸ் பற்றி ஒரு நேர்காணலில் பல ஆர்வமூட்டும் விஷயங்களை வெளியிட்டார்.
நம் பிரதம மந்திரியின் தனிப்பட்ட தினசரி நிகழ்ச்சிகள் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இயற்கையை தான் மிகவும் நேசிப்பதாகவும் இயற்கையோடு சேர்ந்து வாழ்வது தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

அதேபோல் அவருக்கு தினமும் யோகாப்பியாசம் செய்வதில் மிகவும் விருப்பம் உள்ளது என்றும் தன்னுடைய ஃபிட்னெஸ் ரகசியங்களில் இது மிகவும் முக்கியமானது என்றும் கூறினார். அதன் மூலமாகத்தான் தான் தினமும் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதாகவும் சுமார் 130 கோடி மக்களின் பிரதிநிதியாக தன் வேலைகளை சரியானபடி செய்ய முடிகிறது என்றும் கூறியுள்ளார்.

அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு நாம் கூட நரேந்திர மோடிஜியின் டயட் மற்றும் ஃபிட்னெஸ் ரகசியங்களை ஓரளவு தெரிந்து கொள்வோம்.

ஒரு நேர்காணலில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் ஒவ்வொரு மனிதனுக்கும் தினமும் குறைந்தது ஆறு மணி நேரம் தூக்கம் வேண்டும். இதன் மூலம் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும். அதே நேரத்தில் அமைதியான தூக்கம் வேண்டும். தூங்கும் போது எப்படிப்பட்ட ஆலோசனைகளும் செய்யக்கூடாது. நான் கூட தூங்குவதற்கு சற்று நேரம் முன்பு அனைத்து விஷயங்களையும் ஓதுக்கி விட்டு ரிலாக்ஸ் ஆக இருப்பேன் என்று மோடி கூறினார்.

உலகத்திற்கு நம் இந்தியா அளித்த மிகப்பெரிய கொடைகளில் யோகா ஒன்று. இதனைக் கூட பிரதமர் நரேந்திர மோடியே உலகத்திற்கு அறிமுகம் செய்வித்தார். அதோடு பிரசாரமும் செய்தார். அதுமட்டுமன்றி தானும் ஒவ்வொருநாளும் கட்டாயமாக யோகாப்பியாசம் செய்து வருகிறார்.

அவர் தினமும் மிகவும் உற்சாகமாக இருப்பதற்கு யோகாப்பியாசத்தில் தான் செய்யும் ஆசனங்களே காரணம் என்று கூறுகிறார். சூரிய நமஸ்காரம் மற்றும் பிராணாயாமம் போன்றவற்றின் மூலம் உடல் ஆரோக்கியத்திற்கு சிறப்பான நலன் விளையும் என்றும் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மிகவும் பிடித்த உணவு கிச்ச்டி. அரிசியோடு கொஞ்சம் பருப்பும் நெய்யும் சேர்த்து தயாரிக்கும் இந்த கிச்சடி மிகவும் ருசியாகவும் விரைவில் ஜீரணம் ஆகக் கூடியதாகவும் இருக்கும். இதில் அதிகமாக நியூட்ரிஷன்களும் மைக்ரோ நியூட்ரிஷன்களும் உள்ளன. இவ்வாறு பிரதமர், “நான் சைவ உணவு மட்டுமே உண்பதால் என் உடல் என் கட்டுப்பாட்டில் இருக்கிறது” என்று கூறினார்.

தியானம் என்றால் மூச்சின் மீது கவனம் என்று பொருள். தியானம் என்பது முழுமையான ஓய்வு. அதனால் இதனை நமக்கு முழுமையாக ஓய்வு கிடைக்கும் நேரத்திலேயே செய்ய வேண்டும். அதற்கு தடை ஏற்படும் நேரங்களை ஒதுக்கிவிட்டு அதற்குத் தகுந்த இடத்தையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

modiji and yoga

சாதாரணமாக சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும் போது தியானம் செய்வதற்கு அனுகூலமான நேரங்கள். அதேபோல் உங்களுக்கு அனுகூலமான முத்திரையில் நீங்கள் அமர வேண்டும். ஏனென்றால் நாம் அமரும் முத்திரை கூட நம்மீது தாக்கம் ஏற்படுத்தக் கூடியவை. முதுகெலும்பு நேராக கூனாமல் அமர்ந்திருக்க வேண்டும். கண்களை மூடிக்கொண்டு தோள்பட்டை, கழுத்து அமைதியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

எந்த வயது உள்ளவர்கள் என்றாலும் சரி. பிராணாயாமம், உடற்பயிற்சி செய்யும்போதோ, தியானம் மற்றும் யோகாப்பியாசம் செய்யும்போதோ வயிற்றைக் காலியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

முக்கியமாக வெறும் வயிற்றில் இவற்றை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். ஏனென்றால் ஒரு வேளை நீங்கள் உணவருந்திவிட்டு தியானம் செய்ய உட்கார்ந்தால் தூக்கம் வந்துவிடும். ஆனால் பசியோடு இருக்கும்போது மட்டும் இது போன்றவற்றை செய்ய வேண்டாம்.

பிரதமர் மோடி தான் பிட்னெஸ் சாதிப்பதற்கு பஞ்ச சூத்திரங்களை கடைப்பிடிப்பதாக கூறினார். அவை எங்கு பயிற்சி செய்தாலும் அங்கு நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் இருப்பதாக பார்த்துக் கொள்வேன் என்றார்.

pm modi yoga

ஒவ்வொருநாளும் காலையிலேயே நடைப்பயிற்சி செய்யும் இடங்களில் நீரும் கூழாங்கற்களும் இருப்பதுபோல் பார்த்துக் கொள்வார். இந்த விஷயத்தை பிரதமர் மோடியே நேராக சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்து அனைவருக்கும் ஷேர் செய்து கொண்டுள்ளார்.

பிரதமர் மோடி தீய பழக்கங்களில் இருந்து தூரமாக இருப்பவர். அதனால்தான் 70 வயதில் அடி எடுத்து வைக்கும் போதும் இன்னும் ஆக்டிவாக இருப்பதாக கூறினார். அதேபோல் வயது உடலுக்குத் தானே தவிர மனதுக்கு அல்ல என்று கூறியுள்ளார்.

நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! மேலும் மேலும் அவர் நல்ல ஆரோக்கியத்தோடு 100 ஆண்டுகள் வாழ்ந்து நம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சேவையாற்ற வேண்டும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version