
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் தாயார் சுலோச்சனா சுப்ரமணியம்
காலமானார்.
அமரர் K.சுப்பிரமணியம்,IAS (1951,TN Cadre) மனைவியும் தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் Dr.S.ஜெய்சங்கரின் தாயாருமான திருமதி.சுலோசனா சுப்பிரமணியம் இன்று இறைவனடி சேர்ந்தார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் வீட்டில் சோகம். அவருடைய தாய் சுலோச்சனா சுப்ரமணியம் காலமானார்.
கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியின்றி இருந்த அவர் சனிக்கிழமை இன்று காலமானார். இந்த செய்தியை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தன் டுவிட்டர் மூலம் வெளியிட்டார்.
“என் தாயார் சுலோச்சனா சுப்பிரமணியம் இன்று சனிக்கிழமை காலமானார் என்று தெரிவிப்பதற்கு வருத்தமாக உள்ளது. அம்மாவின் நலம் விரும்பிகளும் நண்பர்களும் அவரை தங்களின் சிந்தனையில் நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர் உடல்நலமின்றி இருந்த போது எங்களுக்கு உதவியாக நின்ற ஒவ்வொருவருக்கும் என் நன்றிகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல பிரமுகர்கள் டுவிட்டர் மூலம் ஜெய்சங்கருக்கு அனுதாபத்தை தெரிவித்து வருகிறார்கள்.