
கற்சிலையை சிதைத்த கொரோனா! சென்னை விஜிபி தங்க கடற்கரையில் கடந்த 30 ஆண்டுகளாக யாராலும் சிரிக்கவைக்க முடியாத கற்சிலையாக நின்று கொண்டிருந்த தாஸ் அவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்…. என்று சமூகத் தளங்களில் வைரலாக அவரது போட்டோவுடன் இணைத்து பரப்பப் பட்டு வருகிறது. மிகவும் உருக்கமான தகவல் என்பதால், பலரும் பரிதாபப் பட்டு இதனை கட்டாயமாகவேணும் பார்வர்ட் செய்து கொண்டே இருக்கிறார்கள்.
இந்த நிலையில், விஜிபி தங்கக் கடற்கரை பொழுதுபோக்கு பூங்காவில் சிலை மனிதன் குறித்த தவறான தகவல் பரவியதற்கு அந்நிறுவனம் மறுப்புத் தகவல் வெளியிட்டுள்ளது …அந்த நிறுவனம் வெளியிட்ட தகவல்…
பிரபலமான விஜிபி தங்கக் கடற்கரை பொழுதுபோக்கு பூங்காவில் மக்களை மகிழ்விப்பதற்காக நிற்கும் சிலை மனிதன் மக்கள் மத்தியில் பிரபலமானவர். கொரோனாவால் இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளிலும் வியாபாரம் முடங்கி பெரிதும் பாதிக்கப் பட்டிருப்பது அனைவரும் அறிந்தது தான்
இந்த நிலையில் எங்கள் விஜிபி சிலை மனிதன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாக பொய்ச் பிரச்சாரம் பரவி வருவது மனம் வருந்தச் செய்யும் செய்தியாகும். அவர் உயிரோடு இருக்கின்றார். ஆனால் அவரைப் பற்றிய சில தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் வந்துகொண்டே இருக்கிறது

சிலை மனிதனுக்கு கொரோனாவோ அல்லது வேறு எந்த வித நோயும் எதுவும் இல்லை எங்கள் விஜிபி சிலை மனிதன் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கின்றார் இன்று காலை 11 மணிக்கு எடுத்த வீடியோவை இங்கே நாங்கள் வெளியிடுகின்றோம்
மீண்டும் விஜிபி பொழுதுபோக்கு பூங்கா பயன்பாட்டுக்கு வரும்போது மக்களை மகிழ்விக்க எங்கள் சிலை மனிதர்கள் காத்திருக்கிறார்கள் என்பதை விஜிபி நிர்வாகம் இதன் வழியாக தெளிவு படுத்துகிறது என்று அந்த நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News