
திருமலை சீனிவாசனின் பிரம்மோற்சவ கொண்டாட்டங்கள் வைபவமாக நடந்துவருகின்றன. ஐந்தாம் நாளான புதன்கிழமை காலையில் மோகினி வடிவத்தில் சர்வாலங்கார பூஷிதராக தந்தப் பல்லக்கில் தரிசனமளித்த ஸ்ரீநிவாசர் மாலையில் கருட வாகனத்தின் மீது கொலு வீற்றிருந்தார்.
முதல்வர் ஜெகன் உட்பட பல அமைச்சர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் சுவாமியின் வாகன சேவையில் பங்கு கொண்டார்கள்.

கோவிட் பின்னணியில் ஆலயத்தில் உள்ள கல்யாண மண்டபத்திலேயே அர்ச்சகர்கள் ஸ்ரீவாரி வாகன சேவையை நிர்வகித்தார்கள்.
அதற்கு முன்பாக ஆந்திர அரசாங்கத்தின் தரப்பில் முதல்வர் ஜெகன் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தார்.
சிஎம் ஜகன் பயணத்தின் பின்னணியில் திருமலா திருப்பதி பகுதிகளில் போலீசார் கட்டுதிட்டமான பந்தோபஸ்து ஏற்பாடுகளை செய்தார்கள்.