மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்களுக்கு மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப் பட்டது.
தமிழ் திரைப்பட உலகின் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்ந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியன் கடந்த 50 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அதன் தொடர்ச்சியாக எஸ்பிபி அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப் பட்டது. பின்னர் அவர் கொரோனாவில் இருந்து மீண்டார். இருப்பினும் வேறு சில உடல் நலக் கோளாறு ஏற்பட்டு, 50 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழகத்திலன் அனைத்துக் கட்சியினர் பிரமுகர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் தமிழ், இந்தி,தெலுங்கு,கன்னடம், மலையாளம் உள்ளிட்ட திரைப்பட நடிகர்கள் கலைஞர்கள் தொடர்ச்சியாக எஸ்பிபி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மதுரை பொன்மேனி பகுதியில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் மற்றும் எல்லிஸ்நகர் வசந்தம் குடியிருப்பு பொதுமக்கள் சார்பாக மறைந்த எஸ்பிபி அவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அவரது புகைப்படத்தை கையில் வைத்து அஞ்சலி செலுத்தினர்.இது மட்டுமல்லாது மதுரை மாவட்டத்தில் இசைக்கலைஞர்கள், பொதுமக்கள் ரசிகர்கள் என பல்வேறு பகுதிகளில் எஸ்பிபி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
– செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News