மதுரை அருகே பாஜக வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் சிந்தாமணி சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வாங்கியதை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி பகுதியில் சுங்கச் சாவடி உள்ளது. இதில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற விதி முறைகளை மீறி சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலித்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியினர் 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு திடீரென சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் செய்தனர். தகவலறிந்து வந்த போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் அவனியாபுரம் காவல் துறையினர் அவர்களை சமரசம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர்.
இதனால், இந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை