
கொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி…. இனி இதுபோல் ஆதார படக்கூடாது.
சர்வதேச சப்ளை செயின் ஒரே நாட்டின் மீது ஆதாரப்படுவது எத்தனை ஆபத்தானது என்று கொரோனா வைரஸ் நமக்கு பாடம் நடத்தி உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
டென்மார்க் பிரதமர் மெடி பிரடரிக் சன் னோடு திங்களன்று நடத்திய இருதரப்பு இணையவழி கூட்டத்தில் எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடாமல் மறைமுகமாக சைனாவை உத்தேசித்து அவர் இந்த விமர்சனம் செய்தார்.
இந்த சந்திப்பில் பிரதமர் மோடி பேசுகையில் சர்வதேச சப்ளை செயின் ஒரே நாட்டின் மீது ஆதாரப்பட்டிருப்பது எத்தனை ஆபத்திற்கு வழிவகுக்கிறது என்பதை கோரோனா தொற்று நமக்கு நிரூபித்துள்ளது என்றார். மறைமுகமாக சைனாவைக் குறிப்பிட்டு மோடி தெரிவித்தார். இந்த நடைமுறையில் மாற்றங்களை எடுத்து வருவதற்கு இந்தியா ஆஸ்திரேலியா ஜப்பான் நாடுகள் சேர்ந்து பணி புரியத் தொடங்கி உள்ளன என்றார். இந்த வழிமுறைக்கு அனுகூலமாக உள்ள நாடுகள் இதில் பங்குதாரர்கள் ஆகலாம் என்று குறிப்பிட்டு மோடி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
கடந்த சில மாதங்களாக நடந்த சம்பவங்கள் மூலம் பல்வேறு நாடுகள் சேர்ந்து பணிபுரிய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றார்.
இதன் தொடர்பாக மோடி இந்தியாவில் கொண்டு வந்துள்ள ஆத்ம நிர்பர் பாரத் என்ற திட்டத்தை பற்றி டென்மார்க் பிரதமருக்கு விவரித்தார்.
அதோடு கூட விவசாயம் மற்றும் தொழிலகத் துறையில் எடுத்து வந்துள்ள மாற்றங்கள் குறித்தும் தெரிவித்தார். ஆத்ம நிர்பர் பாரத் என்ற திட்டத்தின் கீழ் தாம் அனைத்து விதத்திலும் மாற்றங்களை எடுத்து வருவதற்கு முனைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
வடக்கு ஐரோப்பாவை சேர்ந்த நாடுகளில் டென்மார்க் இந்தியாவோடு இருதரப்பு வணிகப் பங்குதாரராக முக்கிய பாத்திரம் வகிக்கிறது என்று கூறினார்.
அதிகாரபூர்வமான கணக்கீட்டின்படி 2016 ல் இருந்து 2019 வரை பாரதம், டென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஷிப்பிங், மீளுருவாக்கும் மின்சாரம், உழவு, உணவு விநியோகம் மற்றும் பல துறைகளில் டென்மார்க்கைச் சேர்ந்த 200 கம்பெனிகள் முதலீடு செய்துள்ளன. டேனிஷ் அமைப்புகளில் ஐந்தாயிரம் பேர் இந்தியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி டென்மார்க்கில் இந்தியாவைச் சேர்ந்த 20 ஐடி கம்பெனிகள் நடந்து வருகின்றன.