spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஉலகின் மிக நீளமான சுரங்கப்பாதை நெடுஞ்சாலை... திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை நெடுஞ்சாலை… திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

- Advertisement -
atal-tunnel-opened
atal tunnel opened

இமாச்சல் பிரதேச மாநிலம் மணாலியில் இருந்து லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்கினை இணைக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அடல் சுரங்கப்பாதையை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

அடல் பிஹாரி வாஜ்பாயால் ஜுன் 2 – 2000 ஆம் ஆண்டு அன்று 9.2 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

2013 அக்டோபர் வரை வெறும் 1.3 கிமீ நீளம் மட்டுமே முடிக்கப்பட்டிருந்தது காங்கிரஸ் அரசால்.செய்த பணியே இடிந்து விழுந்து நிறுத்தி வைத்திருந்தார்கள் பின் 2014 ல் நரேந்திர மோடி அரசு பதவியேற்று 5 வருடத்தில் 7.9 கிமீ நீளத்தை போட்டு முடித்து திறப்பு விழாவே முடிந்துவிட்டது.

atal-tunnel-opened1
atal tunnel opened1

அடல் சுரங்கம் அல்லது ரோஹ்தாங் சுரங்கப்பாதை இமயமலையின் பிர் பஞ்சால் பகுதியில் கட்டப்பட்டுள்ளது.சராசரி கடல் மட்டத்திலிருந்து 10,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.லே மற்றும் மணாலி இடையே சாலை தூரத்தை 46 கிலோமீட்டர் குறைக்க இந்த சுரங்கப்பாதை உதவுகிறது.இது பயண நேரத்தை சுமார் 4 முதல் 5 மணி நேரம் வரை குறைக்கிறது என்கிறார்கள்.

கடுமையான பனிப்பொழிவு மற்றும் சீரற்ற வானிலை காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 மாதங்கள் இப்பகுதி தொடர்பில்லாமல் துண்டிக்கப்பட்டு வந்தது.இந்த விதத்தில் அடல் சுரங்கப்பாதை முக்கியத்துவம் வாய்ந்ததாகும் 365 நாளும் பயணம் செய்ய முடியும்.இது ஆயுதப்படைகளின் இயக்கத்திற்கு மிகப் பெரிய அளவில் உதவும்.

இந்த பாதையில் ஒவ்வொரு 250 மீட்டருக்கும் சி.சி.டி.வி இணைக்கப்பட்டுள்ளது.இருபுறமும் ஒரு மீட்டர் நடைபாதை உள்ளது.அதிகபட்ச போக்குவரத்து ஒரு நாளைக்கு 3,000 பெட்ரோல் கார்கள் மற்றும் ஒரு நாளைக்கு 1,500 லாரிகள் எதிர் பார்க்கப் படுகிறது.வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 80 கி.மீ அனுமதிக்கப்பட்டதாகும்.

modi-in-himachal
modi in himachal

இப்படி சிறப்பு வாய்ந்த உலகிலேயே மிக நீளமான சுரங்கப் பாதைக்கு அடிக்கல் நாட்டிய அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரையே வைத்து நாட்டிற்காக அர்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி.பேரரசை ஸ்தாபிதம் செய்யும் கனவுள்ளவனால் மட்டுமே இதை எல்லாம் சிந்தித்து செயல்படுத்த முடியும்.

atalji-tunnell
atalji tunnell

அடல் சுரங்கப் பாதையின் தெற்கு முனையப் பகுதி, 3,060 மீட்டர் உயரத்தில் மணாலியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அதன் வடக்கு முனைய பகுதி 3,071 மீட்டர் உயரத்தில் லாஹாவ் பள்ளத்தாக்கில் சிஸ்ஸு டெலிங் கிராமம் அருகே அமைந்துள்ளது.

குதிரை லாடத்தின் வடிவத்தில் அமைந்துள்ள ஒரே சுரங்கமாக, இரண்டு லேன்கள் கொண்ட இந்தப் பாதையில், வாகனங்கள் செல்ல 8 மீட்டர் அகலத்துக்கு இடவசதி உள்ளது. 5 புள்ளி 525 மீட்டர் உயரம் வரையிலான வாகனங்கள் இதில் செல்லலாம். இந்தப் பாதை 10.5 மீட்டர் அகலம் கொண்டது. 3.6 X 2.25 மீட்டர் அளவில் தீ பிடிக்காத, அவசர கால சுரங்கம், பிரதான சுரங்கத்துடன் இணைக்கப்பட்டதாக இருக்கிறது.

தினமும் 3,000 கார்கள் மற்றும் 1500 லாரிகள் செல்லும் வகையில் அதிகபட்சம் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய வகையில் அடல் சுரங்கப் பாதை அமைக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு 1 கிமீ தூரத்தில் காற்று தர கண்காணிப்பு கருவி அமைக்கப்பட்டுள்ளது. 250 மீட்டர் இடைவெளிக்கு ஒரு சிசிடிவி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 500 மீ. இடைவெளியில் அவசரகால வெளியேறும் வழி அமைக்கப்பட்டுள்ளது.

atalji-tunne
atalji tunne

ஒவ்வொரு 60 மீ. இடைவெளியில் தீ அணைப்பு குழாய் அமைக்கப்பட்டுள்ளது. குதிரை கால் லாடத்தை போல யு வடிவத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 2.2 கிமீ தூரத்தில் சாலை திருப்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சுரங்கப்பாதையில் ஒரு நாளைக்கு 3,000 கார்கள், 1,500 கனரக வாகனங்கள் 80 கி.மீ வேகத்தில் செல்ல முடியும்.

குறிப்பு: இந்தியப் படைகளை எதிரிப் படைகளின் கண்காணிப்பில் சிக்காமல் எல்லைப்பகுதிகளுக்கு கொண்டு சென்று சேர்க்கவும் உதவும் எனவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe