போலி என்சிசி சான்றிதழ்கள் கொடுத்து ஆறு ஆண்டுகளாக எஸ்ஐ யாக பணிபுரிந்தார். வெளிப்பட்ட போலித்தனம்.
போலி ஆவணங்களோடு அதிகாரிகளின் கண்ணை மறைத்து ஆறு ஆண்டுகாலம் எஸ்ஐயாக பணிபுரிந்தார் ஒரு போலி போலீஸ்
இறுதியில் ஒரு சின்ன தகராறு காரணமாக அவருடைய ஜாதகம் வெளிப்பட்டது.
ஆந்திராவிலுள்ள குண்டூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நேர்ந்தது.
விவரங்கள் இதோ… பிரபாகர் ரெட்டி என்பவர் 2011 ல் எஸ்ஐ ரெக்ரூட்மெண்ட்டில் தகுதி பெற்றார். அவருக்கு இரண்டு வயது அதிகமாக இருந்ததால் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தார்கள். என்சிசியில் இன்ஸ்ட்ரக்டராக பணிபுரிந்ததாக போலி சர்டிபிகேட்டுகளை அளித்திருந்தார். மூன்றாண்டுகள் தளர்வு இருந்ததால் வேலையை பெற்று விட்டார்.
சில நாட்களுக்கு முன்பு பிரகாசம் மாவட்டம் கொமரோலுவில் எஸ்ஐ யாக பணிபுரிந்தபோது எம் பி டி ஓ வோடு தகராறு நேர்ந்தது. அவர் எஸ்ஐ யின் வழிமுறையை மீது சந்தேகம் கொண்டு ஆராய தொடங்கவே போலி சர்டிபிகேட் அளிந்துள்ள வெளிப்பட்டது. இந்த விஷயம் குறித்து உயர் அதிகாரிகளின் பார்வைக்கு எடுத்துச் சென்றார். மர்காபுரம் டிஎஸ்பி விசாரணை செய்து இவருடைய போலித்தனத்தை வெளிக்கொணர்ந்தார். உடனே அவரை பணியிலிருந்து நீக்கி அவர் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தற்போது அவர் குண்டூர் மாவட்டத்தில் உள்ள நகரம்பாலம் போலீஸ் ஸ்டேஷனில் அட்டச்மெண்ட் எஸ்ஐ யாக பணிபுரிந்து வருகிறார்.
ஆறு ஆண்டுகள் பணிபுரிந்து வந்தாலும் அதிகாரிகள் அதனை கண்டுபிடிக்க முடியாதது குறித்து பொதுமக்கள் ஆத்திரம் அடைந்துள்ளார்கள். அதிகாரிகள் இத்தனை சோம்பேறிகளா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.