அழகு நடிகை காஜல் திருமணத்திற்கு முகூர்த்தம் ரெடி.
அதிகாரப்பூர்வமாக அறிவித்த டாலிவுட் அழகு நடிகை. பிசினஸ்மேன் கௌதம் கிச்லு வை மணக்கப் போகிறார். செவ்வாயன்று இந்த இனிப்பு செய்தியை வெளியிட்டார்.
அக்டோபர் 30 ம் தேதி மும்பையில் தன் திருமணம் நடக்கப் போகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கௌதம் கிச்லுவை அக்டோபர் 30ம் தேதி திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று உங்களுக்கு தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மும்பையில் நெருங்கியவர்களின் முன்னிலையில் எங்கள் திருமணம் நடக்கப்போகிறது. வாழ்க்கையின் இந்த புதிய ஆரம்பத்திற்காக நாங்கள் மிகவும் த்ரில்லிங்காக எதிர்பார்த்துள்ளோம். நீங்கள் அனைவரும் கூட இந்த சந்தோஷத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் என்மீது காட்டிய அன்புக்கும் அபிமானத்திற்கும் நன்றி. இந்த புதிய பயணத்தில் நாங்கள் உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தை விரும்புகிறோம். திருமணத்திற்குப் பிறகு கூட நான் எனக்கு மிகவும் பிரியமான நடிப்பைத் தொடருவேன். என் ரசிகர்களுக்கு ஆனந்தத்தை அளிப்பேன். மீண்டும் ஒருமுறை உங்களிடமிருந்து கிடைக்கும் இந்த அன்பிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அவருடைய இந்த போஸ்டுக்கு வெறும் 40 நிமிடங்களில் இரண்டு லட்சம் பேருக்கு மேலாக லைக் செய்துள்ளார்கள். சினிமா பிரபலங்கள் ராசிகன்னா, பிரக்யா ஜெஸ்வால், அனுசுயா, மெஹரின், நடாஷா மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்கள்.
காஜல் கௌதம் பல சந்தர்ப்பங்களில் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோக்கள் சோஷல் மீடியாவில் வைரலாக சுற்றி வருகின்றன.
பிரபல பிசினஸ்மேன் கௌதம் கிச்லு, காஜல் நிச்சயதார்த்தம் நடந்தது என்று கடந்த சில நாட்களாக செய்தி சுற்றி வருகிறது. விரைவில் இவர்கள் திருமணம் மும்பையில் நடக்கப் போவதாக கூறி வந்தார்கள். இப்போது அந்த செய்திகளை தன் போஸ்ட் மூலம் உண்மைதான் என்று நிரூபித்துள்ளார்.
கௌதம், டிசர்ன் லிவிங் என்ற இன்டீரியர் டிசைனிங் கம்பெனியைத் தொடங்கி நடத்தி வருகிறார். காஜல் சென்ற ஆண்டு சீதா, ரணரங்கம் திரைப்படங்களில் நடித்தார். தற்போது ஆச்சாரியா மோசகாள்ளு, பாரதீயுடு, மும்பை செக மற்றும் பல படங்களில் நடித்து வருகிறார். அவர் டைட்டில் ரோலில் நடித்த பாரிஸ் பாரிஸ் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.