தெலங்காணாவில் அம்மன் கோவில் நகை திருட்டு.
அதிலாபாதில் அம்மன் சிலைமேல் இருந்த நகைகளை திருடிச் சென்றனர் போக்கிரிகள். அதிலாபாத்தில் திருடர்கள் நடமாட்டம் அதிகமாகி வருகிறது. பட்டப்பகலிலேயே அம்மன் கோவிலில் நகைகளை திருடிச் சென்று உள்ளார்கள்.
கோவில் சன்னதியின் கதவுப் பூட்டை உடைத்து அம்மன் சிலையின் மேல் இருந்த கிரீடம் மற்றும் நகைகளை திருடர்கள் அபகரித்துச் சென்ற காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிலையின் கழுத்திலிருந்தும் கையில் இருந்தும் காதில் இருந்தும் நகைகளை எடுத்துச் சென்ற காட்சிகள் ரெக்கார்ட் ஆகியிருந்தது.
சிசி கேமராவில் ரெக்கார்ட் ஆகி இருந்த காட்சிகளை பார்த்து அது மகாராஷ்டிராவைச் சேர்ந்த திருடர்கள் என்று போலீசார் சந்தேகித்து தேடி வருகிறார்கள்.