வாஷிங் மெஷினுக்குள் சிக்கிக் கொண்ட இளம்பெண். அதற்குள் ஏன் புகுந்தார்?
ஒரு இளம்பெண் வாஷிங் மெஷினுக்குள் சிக்கிக் கொண்ட வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.
தீயணைப்பு அலுவலகத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தன் வீட்டில் ஒருவர் வாஷிங் மிஷினில் சிக்கிக் கொண்டுள்ளார் என்று தெரிவித்தார்கள். அதனால் தீயணைப்பு ஊழியர்கள் அவசர அவசரமாக அங்கு சென்று சேர்ந்தார்கள். வீட்டிற்குள் புகுந்த பின் நடந்நதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். வாஷிங் மெஷினில் சின்ன குழந்தைகள் யாரோ சிக்கி இருப்பார்கள் என்று எண்ணிச் சென்றார்கள். ஆனால் அதில் சிக்கியிருந்த பெண்ணுக்கு 21 வயது. அழுத முகத்தோடு தீயணைப்பு ஊழியரை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தார்.
அவருடைய நண்பர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் திண்டாடினார்கள். நடந்த விஷயத்தை ஊழியர்களுக்கு தெரிவித்தார்கள்.
இங்கிலாந்திலுள்ள ஈஸ்ட் யார்க்ஷயரில் நடந்த இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் வைரலாக மாறியது.
ரோஸி கோலே என்ற 21 வயது இளம்பெண் தன் அறை நண்பர்களளோடு மது அருந்தியுள்ளார். அப்போது அவருடைய நண்பர்கள் அவருக்கு ஒரு சவால் விட்டார்கள். உனக்கு மட்டும் துணிவிருந்தால் வாஷிங் மெஷின் கம் டிரையரில் புகுந்து காட்டு பார்க்கலாம் என்றார்கள். அதனை சீரியஸாக எடுத்துக் கொண்ட அந்தப் பெண் அதுபோல் அதற்குள் புகுந்துள்ளார்.
போகும் நன்றாகத்தான் புகுந்தாய். சரி சரி… திரும்ப வா என்று கூப்பிட்டனர். ஆனால் அவருக்கு அதில் இருந்து வெளியில் வர எத்தனை முயற்சித்தும் முடியவில்லை.
இடுப்புப் பகுதி அதில் சிக்கிக் கொண்டது. அதிலிருந்து தன்னை வெளியே எடுத்துக் கொள்ள முடியாமல் திண்டாடினார். அதைப்பார்த்து அவருடைய நண்பர்கள் சிரிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் அவர் அதிர்ச்சி அடைந்ததை உணர்ந்து உடனே உதவி செய்ய முன் வந்து அவரைப் பிடித்து வெளியில் இழுக்க முயற்சித்தார்கள். ஆனால் பலன் இல்லாமல் போயிற்று.
தீயணைப்பு ஊழியர்கள் மரத்தின்மீது சிக்கியிருந்த பூனைகளை காப்பாற்றி உள்ளார்கள். வாஷிங் மிஷினில் சிக்கிக் கொண்ட ஸ்டூடண்ட்டைக் காப்பாற்றுவார்களோ கேட்டுப் பார்க்கலாம் என்று ஒரு நண்பர் கொடுத்து அறிவுரைப்படி தீயணைப்பு அலுவலகத்துக்கு போன் செய்து உள்ளார்கள்.
அங்கு வந்து சேர்ந்த ஊழியர்கள் ரோஸியை அதிலிருந்து வெளியே எடுத்தார்கள்.
ரோஸியும் நண்பர்களும் அப்பாடா கண்டம் பிழைத்தது என்று பெருமூச்சுவிட்டார்கள்.
இந்த வீடியோவை அவர் டிக்டாக்கில் போஸ்ட் செய்தார். அவ்வளவுதான்… அந்தக் கணத்திலிருந்து அது வைரலாக மாறியது. டுவிட்டரில் கூட சுற்றி வந்தது. இந்த வீடியோவை பார்த்தால் உங்களாலும் சிரிப்பை அடக்க முடியாது.