டாக்டர் சவுந்தரராஜனுக்கு முதல்வர் கேசிஆர் சன்மானம்.
தெலங்காணா முதல்வர் சந்திரசேகர ராவ் வெள்ளிக்கிழமை ராஜ்பவனுக்குச் சென்றார். மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜனின் கணவர் பிரபல நெப்ராலஜிஸ்ட் டாக்டர் சவுந்தரராஜனுக்கு தன்வந்திரி அவார்டு கிடைத்ததை முன்னிட்டு அவருக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். அதன்பிறகு சால்வை போர்த்தி நினைவுப்பரிசு அளித்தார்.
முதல்வர் கேசிஆரோடு கூட அவருடைய மகள் கவிதா உடன் இருந்தார். அதற்கு முன் முதல்வருக்கு கவர்னர் வரவேற்பு அளித்தார்.