ஒரு 16 வயது சிறுமி ஒருநாள் பிரதமராக ஆனார். இது பின்லாந்தில் நிகழ்ந்தது.
இவர் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் அல்ல. சிறுமிகளின் உரிமைக்காக தொடரப்பட்ட கேர்ல்ஸ் டேக்ஓவர் என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பின்லாந்து பிரதமர் சனா மாரின் வாய்ப்பளித்தால் ஒருநாள் பிரதமராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார் இந்த சிறுமி.
தென் பின்லாந்தில் உள்ள வாஸ்கியைச் சேர்ந்த ஆவா மார்ட்டோ என்ற டீன் ஏஜ் கேர்ள் புதன்கிழமை பின்லாந்து பிரதமர் ஆக பணிபுரிந்தார். உயர் அதிகாரிகளோடு மீட்டிங்கில் பங்குகொண்டார். திட்டங்கள் குறித்து உரையாடல்களில் ஈடுபட்டார்.