பிப்ரவரி 24, 2021, 11:01 மணி புதன்கிழமை
More

  தனக்காக தீக்குளித்த 5 பேரின் படங்களுக்கு பூப்போட்ட வைகோ! வீண் ஆன உயிர்த் தியாகம்!

  Home சற்றுமுன் தனக்காக தீக்குளித்த 5 பேரின் படங்களுக்கு பூப்போட்ட வைகோ! வீண் ஆன உயிர்த் தியாகம்!

  தனக்காக தீக்குளித்த 5 பேரின் படங்களுக்கு பூப்போட்ட வைகோ! வீண் ஆன உயிர்த் தியாகம்!

  இனி மதிமுக., எனும் ஒரு தனிக்கட்சி எதற்கு, தனி சின்னம் எதற்கு, தனிக் கொடி எதற்கு?! திமுக.,வையே வைத்துக் கொள்ளலாமே

  vaiko
  vaiko

  ஸ்டாலினை திமுகவின் பட்டத்து இளவரசராக்க பார்க்கிறார் என கருணாநிதியை வைகோ விமர்சனம் செய்ததால், வை.கோ வை திமுக விலிருந்து கருணாநிதி நீக்கியதால், வைகோ விற்காக தீக்குளித்த 5 பேரின் நினைவு நாள் இன்று!

  வைகோ திமுக.,வில் இருந்த நேரம், தனது மகன் ஸ்டாலினை திமுக.,வின் பட்டத்து இளவரசர் ஆக்கப் பார்க்கிறார் கருணாநிதி என்று விமர்சித்தார் வைகோ. இதற்காக, வைகோ., தன்னை கொலை செய்யப் பார்க்கிறார் என்றும், தன்னைக் கொன்றுவிட்டு திமுக,வை கைப்பற்றத் துடிக்கிறார் என்றும் குற்றம் சாட்டி, வைகோ.,வை திமுக.,வை விட்டு வெளியேற்றினார் கருணாநிதி.

  இதற்காக வரிந்து கட்டிக் கொண்டு, வைகோவின் வெளியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ ஆதரவாளர்கள் 5 பேர் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டார்கள். இன்று அவர்களின் நினைவு தினம்.