Homeஅடடே... அப்படியா?விலக்கிய காங்கிரஸ்; விலகிய குஷ்பு! சோனியாவுக்கு கடிதம்!

விலக்கிய காங்கிரஸ்; விலகிய குஷ்பு! சோனியாவுக்கு கடிதம்!

bjp-kushpoo
bjp-kushpoo

பாஜக.,வில் சேருகிறார் குஷ்பு என்று செய்திகள் பரபரப்பாக வெளியானதால், நடிகை குஷ்பூ, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தாம் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை  உறுப்பினர் பொறுப்பில் இருந்தே விலகுவதாக சோனியா காந்திக்கு குஷ்பு கடிதம் எழுதியுள்ளார்.

நடிகை குஷ்பு தனது அரசியல் பயணத்தை திமுகவில் இருந்து தொடங்கினார். அதிமுக.,வின் கட்சித் தொலைக்காட்சியான ஜெயா டிவியில் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்த குஷ்பு திடீரென திமுகவில் 2010இல் சேர்ந்தார். பின்னர்  திமுகவில் இருந்து விலகி 2014இல் காங்கிரசில் சேர்ந்தார் நடிகை குஷ்பூ!

காங்கிரஸ் கட்சியில் அவருக்கு தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பு அளிக்கப்பட்டது இதையடுத்து மிகவும் துடிப்பாக டுவிட்டர் சமூகத் தளத்தில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு இயங்கி வந்தார் காங்கிரஸ் கட்சிக்கும் ராகுலுக்காகவும்,  சப்பை கட்டு கட்டிக்கொண்டு வேறு வழியின்றி ஆதரவு கருத்துக்களை தெரிவித்து வந்தார்

 ஆனால் அண்மைகாலமாக அவருடைய கருத்துகளுக்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சலசலப்பு வலுத்தது கட்சி நிர்வாகிகளுடன் கருத்து மோதல் ஏற்பட்டது இதனால் குஷ்பு மீது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் அதிருப்தியில் இருந்து வந்தார் திடீரென மத்திய அரசின் செயல்பாடு குறித்து ஆதரவு கருத்துக்களை வெளிப்படுத்திய நேரத்தில் அவர் மீது காங்கிரஸ் கட்சியினர் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர் 

இதனிடையே, குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக கடந்த சில நாட்களாக ஊகங்கள் உலா வந்தன. அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக டுவிட்டர் தளத்தில் கருத்து பகிர்ந்த நடிகை குஷ்பூ ஒரு ட்வீட்டுக்கு 2 ரூபாய் வாங்கிக் கொண்டு, தான் பாஜகவில் சேரப்போவதாக வதந்தி பரப்புகிறார்கள் என குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், அவர், சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு, திடீரென தில்லி புறப்பட்டுச் சென்றார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள்  நீங்கள் பாஜகவில் இணைய போகிறீர்களா?   என்று கேள்வி எழுப்பினர் அதற்கு நடிகை குஷ்பூ  No comments என பதிலளித்தார். பின்னர், காங்கிரசில் நீங்கள் இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு தாம் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று பதில் அளித்தார் 

congpress-releas

இந்நிலையில், நடிகை குஷ்பூ காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர்  பதவியிலிருந்து நீக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின  காங்கிரஸ் செய்தி தொடர்பாளர். பதவியில் இருந்து குஷ்பூ நீக்கப்படுவதாக காங்கிரஸ் செயலாளர் பிரணவ் ஜா அறிவித்தார்.

இந்நிலையில் தாம்  காங்கிரஸ்  கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே விலகுவதாக, அக்கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு குஷ்பூ  கடிதம் எழுதியுள்ளார் இந்த கடிதம் இன்று காலை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

kushboo-letter
kushboo-letter

அந்தக் கடிதத்தில் 2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவி, சரிவில் இருந்த நேரத்தில், பணம், பதவி, பெயரை எதிர்பார்க்காமல் கட்சியில்  தாம் சேர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார் அதேநேரம்  உயர் பதவிகளில் உள்ள சிலர், கட்சிக்கு உண்மையாக உழைப்பவர்களுக்கு மதிப்பு அளிப்பதில்லை என்பதுடன், தாம் நசுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் 

தாம் கட்சியில் உண்மையாக பணியாற்றியதாகவும், இது யாருக்கும் பிடிக்கவில்லை. என்னை ஒடுக்க நினைத்தனர். இதனால் நான் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார் குஷ்பு. 

தாம், பணம், பதவி, புகழ் போன்ற காரணங்களுக்காக கட்சியில் சேரவில்லை என்று குறிப்பிட்டுள்ள குஷ்பு, காங்கிரசில் பதவி கொடுத்த ராகுல் மற்றும் கட்சியினர் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வ தாகவும், அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,100FansLike
380FollowersFollow
74FollowersFollow
74FollowersFollow
3,929FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!

புத்தம் புது படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!...

பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் பிரபல பாடகி ஜோனிடா காந்தி..

பிரபல பின்னனி பாடகி ஜோனிடா காந்தி , பஞ்சாபி தெலுங்கு மராத்தி குஜராத்தி கன்னட...

இந்தவாரம் என்ன என்ன சினிமா திரையில் ஓடிடியில் பார்க்கலாம்…

வரும் செப்டம்பர் 30இல் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், இதற்கு ஒருநாள் முன்னதாக தனுஷ் நடித்த...

நீல வண்ணத்தில் லிப்ஸ்டிக் போட்டு வந்த நடிகை ஊர்வி ஜாவித்..

நீல வண்ணத்தில் லிப்ஸ்டிக் போட்டு வந்த பிரபல நடிகை ஊர்வி ஜாவித்திடம் ரசிகர்கள் பல...

Latest News : Read Now...