Homeஅடடே... அப்படியா?நான் ரெடி! நீ ரெடியா? செந்தில் பாலாஜிக்கு சவால் விடும் அதிமுக., நிர்வாகி!

நான் ரெடி! நீ ரெடியா? செந்தில் பாலாஜிக்கு சவால் விடும் அதிமுக., நிர்வாகி!

minister-vijayabhaskar
minister-vijayabhaskar

சவாலுக்கு தயார் ! உன்னுடைய பந்தயத்திற்கு நான் ஒருவனே போதும்! சவால் விடும் அதிமுக நிர்வாகி ?

சவாலுக்கே சவால் விட்ட அதிமுக நிர்வாகி கரூரில் பரபரப்பு அரசியல் ? பயந்து ஓடும் தி.மு.க செந்தில் பாலாஜி !

சில வாரங்களுக்கு முன் கரூரில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க தான் ஜெயிக்கும் என்றும் அதுவும் ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் 4 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதாகவும், இதற்கு பந்தயம் கட்ட தயாரா? என்றும் கேள்வி எழுப்பினார் செந்தில் பாலாஜி.

குறிப்பாக, இந்த சவாலுக்கு கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக வினர் ரெடியா ? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த வீடியோவை, சென்ற வாரம் வரை தி.மு.க வினர் அதிரடியாக பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களிலும் வைரலாக்கி விட்டனர்.

இதை அடுத்து சிலர் ஒரு படி மேலே சென்று ரூபாய் நோட்டுகளை பல ஆயிரங்களை எண்ணிய படி, நான் எங்கே வர்றட்டும், எத்தனை லட்சம் கொண்டு வர்றட்டும், என்று எண்ணிக் காட்டிய படியே அ.தி.மு.க வினரை தி.மு.க வினர் சீண்டினர்.

இந்நிலையில், கரூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் கே.என்.ஆர். சிவராஜ் ஒரு வீடியோவினை வெளியிட்டார். அதில் சாதாரண அ.தி.மு.க தொண்டன் நான் சவால் விடுகின்றேன் என்றும் எப்போது பணம் கட்டலாம் என்றும், பத்திரப்பதிவுடன் பணம் கட்ட ரெடியா ? நகையை அடமானம் வைத்து ரூ 10 லட்சம் பந்தயத்திற்கு நான் ரெடி, என்று செந்தில் பாலாஜியின் சவாலுக்கு எதிர் சவால் விட்டு ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டார்.

கடந்த வாரம் அவர் வெளியிட்ட அந்த வீடியோ., கரூர் மாவட்டம் மட்டுமில்லாது, தமிழக அளவில் வைரலாகி வருவதோடு, உண்மையான தி.மு.க வினரும் அந்த வீடியோ வினை லைக் செய்து வருகின்றனர்.

காரணம் திடீரென்று அ.தி.மு.க விலிருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பின்பு தி.மு.க என… பல்வேறு கட்சிகளில் இருந்துவிட்டு, தற்போது திடீரென்று தி.மு.க வில் இணைந்த அவருக்கு உடனே கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் பதவி மட்டுமல்லாமல், அவருடன் வந்த அவரது ஆதரவாளர்களுக்கு மட்டும் பதவி அளிக்கப் பட்டதால், உண்மையாக கட்சியில் விசுவாசமிக்க தி.மு.க வினர் தங்களுக்கு கட்சித் தலைமை வஞ்சம் செய்து விட்டதாக பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் ஆகியவற்றில் குமுறித் தள்ளி, இந்த வீடியோவை வைரல் ஆக்கினர்.

vijayabhaskar-admk
vijayabhaskar-admk

தற்போது அ.தி.மு.க நிர்வாகியும், அ.தி.மு.க தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை செயலாளருமான கே.என்.ஆர்.சிவராஜ் பேச்சிற்கு இதுவரை தி.மு.க வினர் பதில் அளிக்காமல், அடக்கி வாசித்து வருகின்றனர். தி.மு.க வினர் என்பதை விட செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களே என்று கூறலாம் என்கின்றனர் கரூர் மாவட்டத்தினை சார்ந்த உண்மையான தி.மு.க வினர்.

இது மட்டுமில்லாமல், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரூர் வந்திருந்த பா.ஜ.க மாநில பொது செயலாளர் பேராசிரியர் ஸ்ரீநிவாசன் பேட்டியளிக்கும் போது, தி.மு.க செந்தில் பாலாஜி தேர்தல் வரும் முன்னரே, முண்டாசு கட்டி விட்டுள்ளார். அவரது இந்த பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரது இந்த சவால் எத்தனை கோடி செலவிடக் காத்திருக்கின்றார் என்ற ஐயத்தினையும் ஏற்படுத்தியுள்ளது, ஆகவே இவரது பேச்சு விசாரணைக்கு உட்படுத்தப் பட வேண்டும் என்றார்.

இந்நிலையில் ஆங்காங்கே செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் போதெல்லாம் இதே போல, கூறி வந்த தி.மு.க வின் செந்தில் பாலாஜிக்கு, அதிமுக நிர்வாகி கே.என்.ஆர்.சிவராஜ். ஒரே ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அதில் பந்தயத்திற்கு நான் ரெடி, எங்கள் அமைச்சர் கூட உனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை, தி.மு.க வினரும் சரி, எங்கே பத்திரப்பதிவுடன் கூடிய பந்தயம் கட்ட ரெடி என்று ஒரு வீடியோவினை வெளியிட்டுள்ளார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

Follow Dhinasari on Social Media

19,075FansLike
380FollowersFollow
79FollowersFollow
74FollowersFollow
4,166FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + 7 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

இந்த நூற்றாண்டின் இசைமேதை கண்டசாலா: நூற்றாண்டு விழாவில் வெங்கய்ய நாயுடு புகழாரம்!

மத்திய கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து கலா பிரதர்ஷினி நடத்திய இசை மேதை பத்மஸ்ரீ கண்டசாலா வெங்கடேஸ்வர ராவின் நூற்றாண்டு விழா

வயதானவர்களின் வலியைச் சொல்லும் Hi 5 – பட இசை வெளியீட்டு விழா!

இன்று உலகம் முழுக்கவே வயதானவர்களை பார்த்து கொள்ள  ஆளில்லை என்ற பிரச்சனை தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படம் அதைப்பற்றி பேசுவது

‘விடுதலை’ படப்பிடிப்பின்போது விபத்து: சண்டை பயிற்சியாளர் பலி..

வெற்றிமாறனின் 'விடுதலை' படப்பிடிப்பின்போது விபத்து: சண்டை பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில்...

காலங்களில் அவள் வசந்தம் -திரைப்படம் ஒரு பார்வை..

அறிமுக இயக்குனர் ராகவ் மிர்தத் இயக்கியுள்ள படம்காலங்களில் அவள் வசந்தம். படக்குழுவினரை சரியாக பயன்படுத்தியுள்ளார்....

Latest News : Read Now...

Translate »
Exit mobile version