June 23, 2021, 11:25 am
More

  ARTICLE - SECTIONS

  தத்தோபந்த் தெங்கடி நினைவு நாளில்…

  தத்தோபந்த் பாபுராவ் தெங்கடி ஜி நினைவு நாள் இன்று (14 அக்டோபர் 2004).

  thengadiji
  thengadiji

  தத்தோபந்த் பாபுராவ் தெங்கடி ஜி நினைவு நாள் இன்று (14 அக்டோபர் 2004).

  ராஷ்ட்ர ரிஷி. ஒரு கர்மயோகி எப்படி செயல்படுவார் என்பதற்கு நம்முடன் வாழ்ந்த அவரே சாட்சியாவார். 1942 முதல் தனது கடைசி நாள் வரை (62 வருடங்கள்) ஒரு முன்மாதிரியான பிரச்சாரக் ஆக வாழ்ந்து லட்சக்கணக் கான கார்யகர்த்தர்களுக்கு ஒளி விளக்காகத் திகழ்ந்து வழி காட்டியவர்.

  பாரதீய மஸ்தூர் சங்கம் (BMS), பாரதீய கிஸான் சங்கம் (BKS), அகில பாரத அதிவக்தா பரிஷத் (ABAP), அகில பாரத க்ராஹக் பஞ்சாயத்து (ABGP), சம்ஸ்கார் பாரதி, ஸ்வதேசி ஜாகரண் மஞ்ச் (SJM), போன்ற அமைப்புகள் பலவற்றை தோன்றுவித்தவர்.

  நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடியதில் முக்கிய பங்காற்றிய வர். அப்போது லோக சங்கர்ஷ சமிதி செயலாளராக இருந்து நெருக்கடி நிலை அகற்றப்படும் வரை கைதாகா மல் தலைமறைவாகவே நாடெங்கி லும் சுற்றுப்பயணம் செய்து தொண் டர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து போராட்டத்தினை வெற்றி கரமாக நடத்தியவர்.

  நெருக்கடி நிலை விலக்கப்பட்ட பிறகு எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து ஜனதா கட்சி உருவாகிட மிகமுக்கிய பங்காற்றிய வர். மொரார்ஜி தேசாய் மத்திய மந்திரி சபையில் இடம்பெறுங்கள் என்ற போது அதை வேண்டாம் என நிராகரித்து தனது தேசிய புனர் நிர் மானப் பணியினைத் தொடர்ந்தவர்.

  வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கிட முன்வந்தபோது அதை வேண்டாம் என மறுத்தவர்.

  ஹிந்தி, மராட்டி, ஆங்கில மொழிகளில்100கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். எதிர் சித்தாந்தங்களைக் கொண்டவர் களையும் தனது அணுகுமுறையால் நண்பர்களாகக் கொண்டவர்.

  டாக்டர் பீம் ராவ் அம்பேத்கருடன் நெருங்கிய பழக்கம் இருந்தது. அவருக்கு தேர்தல் ஏஜென்ட் ஆக பணிபுரிந்துள்ளார். அம்பேத்கர் தொடங்கிய சங்கத்தின் செயலாளராக இருந்துள்ளார். 12 வருடங்கள் (1966-78) நாடாளுமன்ற மேலவை உறுப்பினரான செயல்பட்டு ள்ளார். உலகின் பலநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

  1984 ஆம் வருடம் முதல்தடவையாக பாரத நாட்டின் தொழிற்சங்கத்திற்கு சீன அரசு அழைப்பு விடுத்தது. அப்போது பி.எம்.எஸ். கிற்குத்தான் அந்த முதல் அழைப்பு கிடைத்தது. திரு.தெங்கடிஜி தலைமையில் பி.எம்.எஸ்.குழு சீனா சென்று வந்தது. சீன ஒலிபரப்பு நிறுவனத்தில் திரு.தெங்கடிஜி அளித்த சிறப்பு பேட்டியும் ஒளிபரப்பானது.

  முதலாளித்துவம், கம்யூனிஸம், சோஷியலிஸம் ஆகியவை நமது நாட்டுப் பிரச்சனைகளுக்கு தீர்வை தராது. நமது நாட்டின் கலாச்சார, பண்பாட்டின் அடிப்படையில் நாம் நமது பிரச்சனைகளுக்கு தீர்வைதேட வேண்டும். அவைகளே வெற்றி பெறும் என்று ஆணித்தரமாகக் கூறியவர். World Trade Organisation வெகுவிரைவில் சிதறுண்டு போகும் என அந்த அமைப்பு துவங்கும்போதே சொன்ன ஒரு தீர்க்கதரிசி.

  1942இல் தனது சட்டப் படிப்பை முடித்த கையுடன் சங்க ப்ரச்சாரக்காக கேரளா வந்தவர். பின்னர் மேற்கு வங்கத்தில் சங்கப்பணிக்காக அனுப்பப்பட்டார். அதைத் தொடர்ந்து தொழிற்சங்க வேலைகளை கற்றுக்கொள்வதற்காக INTUC & AITUC போன்ற தொழிற்சங்க ங்களில் சேர்ந்து பணிபுரிந்துள்ளார். 1955 இல் போபாலில் பாரதீய மஸ்தூர் சங்கத்தை துவக்கினார்.

  அக்கால கட்டத்தில் தொழிற்சங்க உலகில் கம்யூனிஸ சங்கங்கள்தான் கோலோச்சிக் கொண்டிருந்தன. ஆனால் இன்று பி.எம்.எஸ்.தான் நாட்டிலேயே மிகப்பெரிய தொழிலா ளர்கள் அமைப்பாகத் திகழ்கிறது.

  இம்மாதிரி பல சாதனைகளை சப்தமில்லாமல் அமைதியாக உருவாக்கியவர் திரு.தத்தோபந்த் தெங்கடிஜி. அவருடைய வாழ்க்கை, சொல், சிந்தனை என்றென்றும் நமக்கு நல்வழி காத்திடும்.

  • N சடகோபன்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  [orc]

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  24FollowersFollow
  74FollowersFollow
  1,262FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-