Home கிரைம் நியூஸ் மதுரை ஸ்மார்ட் சிட்டி பணியில் விபத்து: கலவை லாரியுடன் ஆற்றில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

மதுரை ஸ்மார்ட் சிட்டி பணியில் விபத்து: கலவை லாரியுடன் ஆற்றில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

madurai-smart-city
madurai-smart-city

மதுரை ஆரப்பாளையம் அருகே நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியில் சிமெண்டு கலவை இயந்திர லாரியுடன் 2 பேர் ஆற்றுக்குள் விழுந்து விபத்து : ஒருவர் பலி

மதுரை, திண்டுக்கல் மெயின் ரோடு வைகை ஆற்றின் இரு கரைகளிலும் சாலை அமைக்கும் பணி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மூலம் நடைபெற்று வருகிறது. இதில் பெத்தானியாபுரம் பகுதியை ஒட்டிய வைகை ஆற்று பாலம் பகுதியில் கீழ்ப்பகுதியில் சாலைகள் அமைக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது அங்கு சாலைகள் அமைப்பதற்கும் காங்கிரீட் கலவை எந்திரத்துடன் கூடிய லாரிமூலம் கலவை கொண்டு வரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று மாலை 5.45 மணி அளவில் கான்கிரீட் கலவை கொண்டுவந்த லாரி ஒன்று திடீரென்று அங்கு தோண்டப்பட்டு இருந்த 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரி டிரைவர் மானாமதுரை பகுதியை சேர்ந்த தாளமுத்து, விருதுநகர் மாவட்டம் ஆத்தூர் அருகே வெல்லூரை சேர்ந்த மாரீஸ்வரன், ஆகிய இருவரும் லாரிக்கு அடியில் சிக்கி உயிருக்கு போராடினார் அவர்களை பொதுமக்கள் மற்றும் மீட்புக்குழுவினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்டனர் இதில் மாரீஸ்வரன் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்து விட்டார். தாளமுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மட்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சிமெண்ட் கலவை காங்கிரிட் லாரியை கிரேன் மூலம் தூக்கும் பணி நடைபெறுகிறது. இந்த சம்பவம் குறித்து கரிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version