Home சற்றுமுன் வளரும் தலைமுறையினருக்கு புத்தகங்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும்!

வளரும் தலைமுறையினருக்கு புத்தகங்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும்!

kulithalai-book-release-function
kulithalai-book-release-function

வளரும் தலைமுறையினருக்கு புத்தகங்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும்’!
குளித்தலை நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு!

குளித்தலை கிராமியம் அரங்கில் தமிழ்ப் பேரவை சார்பில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பணி ஓய்வு தமிழ்ப் பற்றாளர் ராஜன் எழுதிய “வேரில் விழுந்த இடி ” – புதினம் வெளியீட்டு விழா நடைபெற்றது

தமிழ்ப் பேரவை தலைவர் முனைவர் கடவூர் மணிமாறன் தலைமை தாங்கினார்
அறிவுக்கண்ணன், கிராமியம் நாராயணன் சுப.சக்திவேல், பொன்மருதமுத்து முன்னிலை வகித்தனர்

நூலை நாமக்கல் மருத்துவர் பெ.இளங்கோ வெளியிட கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் .மேலை பழநியப்பன் முதல் நூல் பெற்று உரையாற்றிய போது புத்தகங்கள் படிப்பவரை சிந்திக்கச் செய்யவும், வளரும் தலைமுறைக்கு நம் பண்டய பண்பாடு, கலாட்சாரம் வலியுறுத்தும் கருத்துக்களை கொண்டிருக்க வேண்டும் மனித வாழ்வின் மாண்பு போற்றும் நீதிநெறிகள் கூறப்பட வேண்டும் இந்நூல் வள்ளுவரின் குறள் நெறிகளை போற்றும் வகையில் உள்ளது என்றார்

முசிறி உலகத் தமிழ் அமைப்பு நித்யானந்தம் வாழ்த்துரையும் , கவிஞர் மு கன்நூல் அறிமுக உரையும், முனைவர் பேராசிரியர் தஞ்சை ச சுப்பிரமணியன் ஆய்வுரையும் ஆற்றினர் கவிஞர் அந்தோணிசாமி நன்றி கூறினார்

கவிஞர் கருவூர் கன்னல் மணற்பாறை நாவை சிவம் பரமத்தி சரவணன், நன்செய் புகழூர் அழகரசன் யோகா ைவயாபுரி, தென்னிலை கோவிந்தன் கோபால தேசிகன், தண்டபாணி உள்ளிட்ட திரளானவர்கள் பங்கேற்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version