ஏப்ரல் 23, 2021, 7:46 காலை வெள்ளிக்கிழமை
More

  கோயில் கல்வெட்டில் கிறிஸ்துவ மதமாற்ற போஸ்டர்கள் ஒட்டப் பட்டதால் பரபரப்பு!

  மக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்ததுடன், இது போன்ற நபர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும்

  chrisitian-conversion-poster1
  chrisitian-conversion-poster1

  திண்டுக்கல் அருகே பரபரப்பு!
  இந்து கோவில் கல்வெட்டில் கிறிஸ்தவ மத மாற்ற சுவரொட்டி

  திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள அகரம் முத்தாலம்மன் கோவில். இந்தக் கோவில் முன்பு வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் கோவில் வரலாறு குறித்து அச்சிடப்பட்டுள்ளது.

  இந்நிலையில் நேற்று மர்ம நபர்கள் இந்த வரலாற்று கல்வெட்டு மீது கிறிஸ்தவ போதனைகளை வலியுறுத்தியும் மதமாற்றம் செய்யும் வகையிலுமான வாசகங்கள் அடங்கிய சுவரொட்யை ஒட்டி விட்டுச் சென்றுள்ளனர்.

  இதில் நானே ஆண்டவர், வேறு எவரும் இல்லை. என்னையன்றி கடவுள் யாரும் இல்லை இயேசு கிறிஸ்துவை தவிர கடவுள் யாருமில்லை…. என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தது.

  இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

  chrisitian-conversion-poster
  chrisitian-conversion-poster

  இச்சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்துக் கோவில் வரலாற்றுக் கல்வெட்டில், கிறிஸ்தவ மதம் மாற்றும் வகையில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் குறித்து அப்பகுதி மக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்ததுடன், இது போன்ற நபர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,233FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »