
திருத்தங்கல் நகராட்சியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பூமி பூஜை போட்டு தொடக்கி வைத்தார்!
திருத்தங்கல் நகராட்சியில் ரூ.1 கோடியே ஒரு லட்சம் மதிப்பீட்டில் புதிய பணிகளை விருதுநகர் மாவட்ட கழக பொறுப்பாளர் ,பால்வளத் துறை அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜி இன்று பூமி பூஜை போட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
சிவகா சட்டமன்றத் தொகுதியில் ஏராளமான வளர்ச்சி திட்டப்பணிகளை பால்வளத் துறை அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜி தொடங்கிவைத்து வருகின்றார்.
இந்நிலையில் திருத்தங்கல் நகராட்சியில் இன்று ரூ.1 கோடியே ஒரு லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகளை பால்வளத் துறை அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜி பூமி பூஜை போட்டு தொடக்கி வைத்தார்.
அதன்படி திருத்தங்கல் நகராட்சியில் 21வது வார்டு திருப்பதி நகரில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 18-வார்டு சுக்கிர வார்பட்டி சாலையில் ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 2வது வார்டில் பள்ளிக்கூட தெருவில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 2வது வார்டு சிறுவர் பூங்கா தெருவில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 20 வது வார்டில் அக்ரகார தெருவில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, 18 வது வார்டில் ரூ 7 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 18 வது வார்டில் நெற்குத்திப் பாறை அருகே ரூ 7 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 20-வார்டில் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக்கடை கட்டுதல், 3 வது வார்டு பெரியார் காலனியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுதல், 5வது வார்டு முருகன் காலனியில் ரூ7 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுதல், 9 மற்றும் 10 வது வார்டில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக்கடை கட்டுதல், 9-வார்டு கண்ணகி காலனியில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுதல், 18வது வார்டு பழைய வெள்ளையாபுரம் சாலையில் ரூபாய் 8லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகிய பணிகளுக்கு பால்வளத் துறை அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜி இன்று காலை பூமி பூஜை போட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் திருத்தங்கல் நகராட்சி ஆணையாளர் பாண்டி தாய், திருத்தங்கல் அதிமுக நகர கழக செயலாளர் பொன்சக்திவேல் நகர அம்மா பேரவை செயலாளர் ரமணா, பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ், சிவகாசி ஒன்றிய செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன் திருத்தங்கல் முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் சேதுராமன், ரவிசெல்வம், முருகேசன் , சசிக்குமார், ராஜா. திருத்தங்கல் கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, அசெல்வம், திருத்தங்கல் நகர பொருளாளர் கங்கை பொன்முருகன் மற்றும் அரசு அதிகாரிகள் அதிமுக, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.