Homeஅடடே... அப்படியா?மீண்டும் ‘அம்மா’ ஆட்சி அமைய ஆண்டாள் தாயாரிடம் வேண்டினோம்: அமைச்சர்கள்!

மீண்டும் ‘அம்மா’ ஆட்சி அமைய ஆண்டாள் தாயாரிடம் வேண்டினோம்: அமைச்சர்கள்!

ministers-in-srivilliputhur
ministers-in-srivilliputhur

தமிழகம் அனைத்துறைகளிலிலும் சிறந்து விளங்குகிறது என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறினர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூட்டாக இனைந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலில் உள்ள மணவாள மாமுனிகள் ஜீயர் மடம் மற்றும் ஆண்டாள் ரெங்கமன்னார் சன்னதியில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் இரண்டு அமைச்சர்களும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர் . அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசிய போது:

அம்மாவின் அரசு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் பல்வேறு நலத் திட்டப்பணிகள் செயல்படுத்தி ஒவ்வொரு துறையிலும் சிறந்த முறையில் செயலாற்றி வருகிறது.

ministers-in-srivilliputhur1
ministers-in-srivilliputhur1

அவ்வகையில் கால்நடைத்துறையில் 3 மருத்துவ கல்லூரி ஒரு ஆராய்ச்சி நிலையம் தெற்காசியாவில் மிக பெரிய கால்நடை பூங்கா சேலத்தில் தொடங்குவதற்கு கட்டிட வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதத்தில் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் பெருமைகளை சொன்னார்கள் அதனடிப்படையில் அம்மாவின் அரசு பல்வேறு கோவில்களுக்கு பல்வேறு நலப்பணிகளை செய்துள்ளது. தொடர்ந்து அம்மாவின் அரசு அமைந்திட முதல்வர் சிறப்பான ஆட்சியை கொடுத்து வருகிறார்.

ministers-in-srivilliputhur2
ministers-in-srivilliputhur2

இந்த ஆட்சி மீண்டும் அம்மாவின் ஆசியுடனும் மக்களின் ஆதரவுடனும் மறுபடியும் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தாயாரிடம் அதை வேண்டியிருக்கிறோம்.

கால்நடை பராமரிப்பு துறையில் 1154 மருத்துவர்களுக்கான டிஎன்பிசியில் அறிவிக்கபட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.

ministers-in-srivilliputhur3
ministers-in-srivilliputhur3

வேலை வாய்ப்பில் திறந்த மனதொடு முதல்வர் ஆணைக்கினங்க அதன் ஏற்பாடுகள் செய்யபட்டு வருகிறது.2021 -தேர்தலை பொருத்தவரை அம்மாவின் அரசு 5 ஆண்டுகளில் செய்த பணிகள் சாதனனைகளை மக்களிடம் சொல்லி வாக்களியுங்கள் என்று கூறுவோம்.

முதல்வரின் ஒவ்வொரு துறையின் சாதனைகளையும் ஏழை எளிய கிராமபுரங்கள், பேரூராட்சிகள் மக்களுக்கு நாட்டுக்கோழிகள், கரவை பசுக்கள், வெள்ளாடுகள் போன்றவைகளை கொடுக்கின்ற அரசு முதல்வர் எடப்பாடியின் அரசு அம்மாவின் அரசு என்று தெரிவித்தார்.

ministers-in-srivilliputhur4
ministers-in-srivilliputhur4

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்த போது… விஜய் சேதுபதி மகளுக்கு ஆபாச மிரட்டல் மற்றும் கலைத்துறையினருக்கு தொடர்ந்து மிரட்டல் வருவது குறித்த கேள்விக்கு.கலைத்துறையினருக்கு மிரட்டல் வரவில்லை விஜய் சேதுபதி மட்டுமல்ல சாதாரண மக்களுக்கு பாதிப்பு என்றாலும் இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் .

விஜய்சேதுபதி புகார் அளித்துள்ளார் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரிக்கையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு.. நிதி ஆதாரம் இல்லாமல் உள்ளது. நிதியாதாரம் சேர்ந்த பின் நலவாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,100FansLike
380FollowersFollow
74FollowersFollow
74FollowersFollow
3,929FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!

புத்தம் புது படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!...

பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் பிரபல பாடகி ஜோனிடா காந்தி..

பிரபல பின்னனி பாடகி ஜோனிடா காந்தி , பஞ்சாபி தெலுங்கு மராத்தி குஜராத்தி கன்னட...

இந்தவாரம் என்ன என்ன சினிமா திரையில் ஓடிடியில் பார்க்கலாம்…

வரும் செப்டம்பர் 30இல் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், இதற்கு ஒருநாள் முன்னதாக தனுஷ் நடித்த...

நீல வண்ணத்தில் லிப்ஸ்டிக் போட்டு வந்த நடிகை ஊர்வி ஜாவித்..

நீல வண்ணத்தில் லிப்ஸ்டிக் போட்டு வந்த பிரபல நடிகை ஊர்வி ஜாவித்திடம் ரசிகர்கள் பல...

Latest News : Read Now...