Home இந்தியா கொரொனா சிகிச்சையில் மீண்ட… தெலங்கானா முன்னாள் உள்துறை அமைச்சர் நரசிம்மாரெட்டி காலமானார்!

கொரொனா சிகிச்சையில் மீண்ட… தெலங்கானா முன்னாள் உள்துறை அமைச்சர் நரசிம்மாரெட்டி காலமானார்!

telangana-ex-minister-narasimmareddy-passes-away
telangana ex minister narasimmareddy passes away

முன்னாள் உள்துறை அமைச்சர் நாயனி நரசிம்ஹாரெட்டி (80) காலமானார். அரசு மரியாதையோடு அந்திமக் கிரியைகள் நடந்தன. உடலைச் சுமந்து சென்றார் கேடிஆர்.

அரசாங்க மரியாதையோடு நடந்த அந்திமக் கிரியைகளுக்கு அமைச்சர்கள் கேடிஆர், ஈடல ராஜேந்தர், சீனிவாஸ்கௌட், சபீதா இந்திரா ரெட்டி, இந்திரகிரண் ரெட்டி மற்றும் பலர் பங்கு கொண்டார்கள். கேடிஆர், ஶ்ரீனிவாசஸ் கௌட் பாடையைச் சுமந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

தெலங்காணா முன்னாள் உள்துறை அமைச்சர், டிஆர்எஸ் மூத்த தலைவர் நாயினி நரசிம்ஹா ரெட்டியின் பூத உடலுக்கு அந்திமக் கிரியைகள் வியாழக்கிழமை மாலை நடந்து முடிந்தன. ஃப்லிம் நகரில் உள்ள மகா பிரஸ்தானம் மயானத்தில் அரசாங்க மரியாதைகளோடு அந்திமக் கிரியைகளை நடத்தி னார்கள்.

அன்பான தலைவருக்கு விடைகொடுப்பதற்கு அபிமானிகளும் கட்சித் தொண்டர்களும் பெரிய அளவில் வந்து பங்கு கொண்டார்கள்.

அரசாங்கத் தரப்பில் அந்திமக் கிரியைகளுக்கு அமைச்சர்கள் கேடிஆர், ஈடல ராஜேந்தர், சபீதா இந்திரா ரெட்டி, இந்திரகிரண் ரெட்டி மற்றும் பலர் பங்கு கொண்டார்கள். கேடிஆர், ஶ்ரீனிவாஸ் கௌட் பாடையைச் சுமந்து அஞ்சலி செலுத்தினார்கள். அந்திமக் கிரியைகளில் அமைச்சர்களோடு கூட டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்களும் பங்கு கொண்டார்கள்.

telangana ex minister narasimmareddy passes away1

கொரோனா தாக்கி சிகிச்சை பெற்று உடல்நிலை தேறிய பிறகு மீண்டும் உடல்நிலை கவலைக்கிடம் ஆனதால் நாயினி நரசிம்ஹா ரெட்டி புதன்கிழமை நள்ளிரவில் அபோலோ மருத்துவமனையில் காலமானார்.

நாயினி மரணம் குறித்து கேசிஆர் ஆழ்ந்த அதிர்ச்சி தெரிவித்தார். தனித் தெலங்காணா போராட்டத்தையும் அரசாங்கத்தோடு சேர்ந்து பணிபுரிந்த அவருடைய அனுபவத்தையும் முதல்வர் நினைவு கூர்ந்தார். அவருடைய குடும்ப அங்கத்தினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார்.

கொரோனா தொற்றிலிருந்து உடல்நலம் பெற்று வீட்டுக்கு திரும்பி வந்த பின் திடீரென்று உடல்நிலை பிரச்சனை காரணமாக நிமோனியா சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது காலமானார்.

தெலங்காணா மாநிலம் முன்னாள் உள்துறை அமைச்சர் தொழிற்சங்க தலைவர் நாயினி நரசிம்ஹா ரெட்டி புதன்கிழமை நள்ளிரவு தாண்டியபின் காலமானார். கொரோனாவால் தாக்கப்பட்டு உடல் நலம் தேறிய பின்பு அவருக்கு நிமோனியா தாக்கியது. ஒரு வாரமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் . புதன்கிழமை மாலை முதல்வர் சந்திரசேகர ராவ் மருத்துவமனைக்குச் சென்று நாயினி நரசிம்ஹா ரெட்டியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களை கேட்டு தெரிந்து கொண்டார். வெண்டிலேடரில் சிகிச்சை பெற்று வந்த நாயினியைப் பார்த்து கண்ணீர் விட்டார்.

நள்ளிரவில் உடல்நலம் கவலைக்கிடமாக மாறியதால் நாயினி காலமானார். நாயினிக்கு மனைவி அகல்யா, மகன் தேவேந்திர ரெட்டி, மகள் சமதா ரெட்டி உள்ளார்கள்.

சோசலிஸ்ட் வாழ்க்கை, உள்ளது உள்ளபடி பேசும் வெள்ளை மனம் நாயினி நரசிம்ம ரெட்டிக்குச் சொந்தம். சோஷலிஸ்டாக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய வராக இருந்த தொழிற்சங்க தலைவராக நீண்ட காலம் அரசியலில் பணிபுரிந்த நாயினி, மாநில அரசியலில் ஜெயின்ட் கில்லராக அப்போது பரபரப்பை ஏற்படுத்தினார்.

முஷீராபாத் தொகுதியில் 1978 ல் நடந்த தேர்தலில் இந்திரா காங்கிரஸில் இருந்து அப்போது தொழிற்சங்கத் தலைவர் டி அஞ்சயா, மறுபுறம் ரெட்டி காங்கிரஸிலிருந்து முன்பு தொழிலாளர் அமைச்சராகப் பணிபுரிந்த ஜி சஞ்சீவரெட்டியோடு அவர் போட்டியிட்டார். அந்த இருவரையும் தோல்வியடையச் செய்து 2,167 ஓட்டுகளில் வெற்றி பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி ஜெயிண்ட் கில்லராக பெயர் பெற்றார்.

1985ல் இரண்டாவது முறை, 2004ல் மூன்றாம் முறை அதே இடத்தில் இருந்து வெற்றி பெற்றார். 2004ல் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி அரசாங்கத்தில் டெக்னிக்கல் எஜுகேஷன் அமைச்சராக பணிபுரிந்தார். ஒய்எஸ் ராஜசேகர்ரெட்டி கேபினெட்டிலிருந்து டிஆர்எஸ் பிரிந்த போது அமெரிக்காவில் இருந்த நாயினி, அங்கிருந்து நேரடியாக தன் ராஜினாமாவை கவர்னருக்கு அனுப்பி தனித் தெலங்காணா மாநில ஏற்பாட்டு விஷயத்தில் தன் ஒத்துழைப்பை தெரிவித்தார்.

தெலங்காணா தனி மாநிலம் ஏற்பட்டபின் எம்எல்சி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்துறை அமைச்சராக, தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பணிபுரிந்தார். தனி தெலங்காணா போராட்டத்தில் கேசிஆருக்கு உறுதுணையாக இருந்து முக்கிய பாத்திரம் வகித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version