― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்19 விருதாளர்களுக்கு தமிழ்ச்செம்மல் வழங்கி கௌரவித்த முதல்வர்!

19 விருதாளர்களுக்கு தமிழ்ச்செம்மல் வழங்கி கௌரவித்த முதல்வர்!

- Advertisement -
tamilsemmalaward

தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் அறிஞர்களை கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு நாள் விழாவையொட்டி, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2019-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகளுக்கு தெரிவு செய்யப்பட்ட 37 விருதாளர்களில், 19 விருதாளர்களுக்கு இன்று (3.11.2020) தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழ்ச் செம்மல் விருதுகளை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 25.7.2014 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ் வளர்ச்சிக்காகத் தனி ஆளாகத் தொண்டு செய்தும், தமிழ் அமைப்பு வைத்துத் தமிழ் மொழிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களை மாவட்டந்தோறும் கண்டறிந்து, அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தமிழ்ச் செம்மல் விருது ஆண்டுதோறும், ஒரு மாவட்டத்திற்கு ஒருவர் என்றவாறு வழங்கப்படும் என்றும், இவ்விருது பெறுபவருக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கான விருதுத் தொகையும், தகுதியுரையும் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்கள். அதன்படி, தமிழ்நாடு அரசு 2015-ஆம் ஆண்டு முதல் தமிழ்ச் செம்மல் விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது.

2019-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகளுக்கு தெரிவு செய்யப்பட்ட,

முனைவர் கோ.ப. செல்லம்மாள் (சென்னை மாவட்டம்),
முனைவர் மரியதெரசா (திருவள்ளூர் மாவட்டம்),
முனைவர் எஸ். ஸ்ரீகுமார் (காஞ்சிபுரம் மாவட்டம்),
திரு. ச. இலக்குமிபதி (வேலூர் மாவட்டம்),
கவிஞர் அ.க. இராசு (எ) பாளைவேந்தன் (கிருஷ்ணகிரி
மாவட்டம்),
கவிஞர் எறும்பூர் கை. செல்வகுமார் (திருவண்ணாமலை மாவட்டம்),
கல்லைக் கவிஞர் வீ. கோவிந்தராசன் (விழுப்புரம் மாவட்டம்),
முனைவர் எஸ்.எம். கார்த்திகேயன் (கடலூர் மாவட்டம்),
முனைவர் த. மாயகிருட்டிணன் (பெரம்பலூர் மாவட்டம்),
முனைவர் து. சேகர் (அரியலூர் மாவட்டம்),
திரு. வ. முத்துமாரய்யன் (சேலம் மாவட்டம்),
கவிஞர் மா. இராமமூர்த்தி (தருமபுரி மாவட்டம்),
திரு. ப. சுப்பண்ணன் (நாமக்கல் மாவட்டம்),
முனைவர் எண்ணம்மங்கலம் அ. பழநிசாமி (ஈரோடு மாவட்டம்),
முனைவர் சு. இளவரசி (கரூர் மாவட்டம்),
கவிஞர் அ. ஞானமணி (கோயம்புத்தூர் மாவட்டம்),
திரு. முத்து சுப்ரமணியன் (திருப்பூர் மாவட்டம்),
திருமதி சபீதா போஜன் (நீலகிரி மாவட்டம்),
திரு. அ. அந்தோணி துரைராஜ் (திருச்சிராப்பள்ளி மாவட்டம்),
முனைவர் அ.அ. ஞானசுந்தரத்தரசு (புதுக்கோட்டை மாவட்டம்),
திரு. சொ. பகீரதநாச்சியப்பன் (சிவகங்கை மாவட்டம்),
திரு. ஆதி நெடுஞ்செழியன் (தஞ்சாவூர் மாவட்டம்),
திரு. இரா. கல்யாணராமன் (திருவாரூர் மாவட்டம்),
திரு. சி. சிவசங்கரன் (நாகப்பட்டினம் மாவட்டம்),
திரு. மை. அப்துல்சலாம் (இராமநாதபுரம் மாவட்டம்),
முனைவர் பி. சங்கரலிங்கம் (மதுரை மாவட்டம்),
முனைவர் அ.சு. இளங்கோவன் (திண்டுக்கல் மாவட்டம்),
திரு. சா.பி. நாகராசன் (எ) தேனி இராஜதாசன் (தேனி மாவட்டம்),
முனைவர் இரா. இளவரசு (விருதுநகர் மாவட்டம்),
திரு .க. அழகிரிபாண்டியன் (திருநெல்வேலி மாவட்டம்),
திரு. நம். சீநிவாசன் (தூத்துக்குடி மாவட்டம்),
திரு. குமரிஆதவன் (கன்னியாகுமரி மாவட்டம்),
திரு. ந. கருணாநிதி (திருப்பத்தூர் மாவட்டம்),
திருமதி வத்சலா சேதுராமன் (செங்கல்பட்டு மாவட்டம்),
திரு. த. தினகரன் (இராணிப்பேட்டை மாவட்டம்),
திரு. உமாகல்யாணி (தென்காசி மாவட்டம்)
திரு. பெ. அறிவழகன் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) ஆகிய 37 விருதாளர்களில்,

19 விருதாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தமிழ்ச் செம்மல் விருதிற்கான விருதுத் தொகை 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்கள்.

தமிழ்ச் செம்மல் விருதுகளுக்கு தெரிவு செய்யப்பட்ட இதர விருதாளர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முன்னிலையில் அமைச்சர் பெருமக்களால் தமிழ்ச் செம்மல் விருதுகள் வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி. தங்கமணி, மாண்புமிகு மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் க. சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் மகேசன் காசிராஜன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் / உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) முனைவர் கோ. விசயராகவன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version