Home அடடே... அப்படியா? சேர, சோழ, பாண்டியருக்கு பிறகு … எடப்பாடிதான்!: கல்வி அமைச்சர் கலகல..!

சேர, சோழ, பாண்டியருக்கு பிறகு … எடப்பாடிதான்!: கல்வி அமைச்சர் கலகல..!

sengottaiyan-in-madurai
sengottaiyan-in-madurai

சேர, சோழ, பாண்டியர் ஆட்சிக் காலம் போல் தமிழகத்தில் தற்போதும் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது என்று மதுரையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார்.

மதுரையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்…

ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். கொரோனா நோயை தடுக்கும் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.

கொரானா தடுப்பு பணிகளில் பாராட்டுதலைப் பெற்ற முதலமைச்சராக தமிழக முதல்வர் உள்ளார். அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.

தமிழகத்தில் 2555 பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. வெளிப்படைத் தன்மையோடு நடந்து வருகிறது. மக்களை நாடி அரசு வருகிறது.

முதல்வருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் என பல்வேறு பணிகளை ஒருங்கிணைத்து செய்து வருகிறார். சேர சோழ பாண்டிய அரசர்களின் பொற் காலத்தைப் போல தமிழக அரசின் காலம் தற்போது பொற்காலமாக உள்ளது.

ஏழை எளிய மாணவர்களும் மருத்துவ மாணவர்களாக வரலாம் என்கிற கனவை நிறைவேற்றியது அதிமுக அரசு. அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை பிரகாசமான எதிர்காலம் ஆக மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சட்டம் என்னவோ அதன்படி இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது பற்றி அரசின் கவனத்திற்கு வந்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டுத்தான் பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கையை முதலமைச்சர் எடுத்துள்ளார். அரசு உரிய வழிமுறைகளை பள்ளிகளுக்காக வகுத்துள்ளது.

பாடத்திட்டத்தை குறைக்க வேண்டும் என்னென்ன பாடத் திட்டத்தை குறைக்க வேண்டும் என அரசால் அமைக்கப்பட்ட குழு முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளது.

தொலைக்காட்சிகள் மற்றும் இதுவரை கொடுக்கப்பட்ட பாடங்களில் இருந்து மட்டுமே தேர்வு வினாக்கள் கொடுக்கப்படும் என்றார்… செங்கோட்டையன்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version