Home கல்வி பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பெற்றோர்களின் எழுத்து பூர்வ அனுமதிக்கான கருத்துக்கேட்பு கடித பதிவு முகாம்!

பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பெற்றோர்களின் எழுத்து பூர்வ அனுமதிக்கான கருத்துக்கேட்பு கடித பதிவு முகாம்!

school
school

கல்வி தொடர்பான பணிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் ஐம்பது சதவிகிதம் பேர் வரை, பள்ளிக்கு அழைத்துக் கொள்ளலாம் என்று மத்திய,மாநில அரசு வழிகாட்டு நெறிமுறைப்படி கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் கல்வியினை வழங்கி வந்தது.

பள்ளி, கல்லூரி திறப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் எழுத்துப்பூர்வமான அனுமதியுடன்தான் செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் இறுதியில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் பெற்றோர்களின் மனநிலை அறிந்து பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

திருச்சி தனியார் பள்ளியில் மாணாக்கர்களின் பெற்றோர்/ காப்பாளர் விருப்ப கருத்து பதிவு முகாம் நடைபெற்றது.

கருத்து பதிவு கடிதத்தினை கல்வி நிறுவனமே வழங்கியது. அக்கடிதத்தில், தங்கள் பள்ளியில் 2020 – 2021 ஆம் கல்வி ஆண்டில் 9 /10 / 11 / 12ஆம் வகுப்பில் படித்து வரும் மாணவச் செல்வன்/ செல்வி…….பெற்றோர்/ காப்பாளர்…… ஆகிய நான் அரசு செய்திக்குறிப்பு 830 , நாள் 04 .11. 2020 மற்றும் பள்ளியில் வழங்கிய அறிவுறுத்தலின்படி மாணாக்கர்களின் பெற்றோர் / காப்பாளர் என்ற முறையில் covid-19 தொற்று நோய் உள்ள இக்காலகட்டத்தில் அரசு வழங்கியுள்ள நோய் தவிர்க்கும் நெறிமுறைகளைப் பின்பற்றியும் மற்றும் எனது மகனின்/ மகளின் கல்வி நலனை கருத்தில் கொண்டும் எனது மகனை/ மகளை பள்ளிக்கு செல்ல அனுமதிப்பதா? அல்லது வேண்டாமா? என்ற எனது விற்பத்தினை பதிவு செய்கிறேன். நான் எனது மகனை/ மகளை 16.11.20 20 முதல் பள்ளிக்கு அனுப்ப இக்கடிதம் மூலம் இசைவு அளிக்கிறேன் / இசைவு இல்லை என உறுதி கூறுகிறேன் நன்றி தங்கள் உண்மையுள்ள பெற்றோர் காப்பாளர் கையொப்பம். அலைபேசி எண் உடன் பதிவு செய்தனர்.

9/10/11/12 வகுப்பிற்கான இசைவு பெட்டி தனித்தனியாக வைக்கப்பட்டிருந்தது. பூர்த்தி செய்யப்பட்ட அவரவர் விருப்ப கடிதத்தினை வகுப்பிற்குரிய கருத்திற்கான பதிவும் பெட்டியில் அளித்தனர்.

letter-to-school
  • யோகா ஆசிரியர் விஜயகுமார், திருச்சி

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version