Home அடடே... அப்படியா? ஆலயங்களில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜைகள்!

ஆலயங்களில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜைகள்!

puliyarai-dakshinamurthi3
puliyarai-dakshinamurthi3

வருடந்தோறும் நடைபெறும் குரு பெயர்ச்சி வைபத்தில், இந்த வருடம், தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார் குரு பகவான்.

குரு பெயர்ச்சியை முன்னிட்டு முக்கியமான குரு ஸ்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சிவாலயங்களில் குருவுக்கு அதிதேவதையாக உள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்திப் பெருமான் சந்நிதிகளில், குரு பரிகார அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 

puliyarai-dakshinamurthi

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை ஸ்ரீ தட்சிணாமூர்த்தி திருக்கோயிலில் இன்று குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. மாலை 6.05க்கு குரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆன நேரத்தில் சிறப்பு மகாதீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் குறிப்பிட்ட அளவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சை மாவட்டம் தென்குடிதிட்டை (குருஸ்தலம்) திருக்கோயிலில் அருள்பாலித்துவரும் ஶ்ரீ சுகுந்தகுந்தாளம்பிகை உடனுறை ஶ்ரீ வசிஷ்டேஸ்வரர் மற்றும் ஶ்ரீ ராஜகுருபகவானுக்கு இன்றைய குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

thittai-gurustalam

மிகவும் புகழ்பெற்ற குரு ஸ்தலமான ஆலங்குடி தலத்தில் குரு பகவானுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அந்தக் காட்சி…

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version