Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் திருவிடைமருதூர் கோயிலில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்!

திருவிடைமருதூர் கோயிலில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்!

thiruvidaimaruthur
thiruvidaimaruthur

தஞ்சாவூர் அருகே திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் கார்த்திகை சோமவார சங்காபிஷேக வழிபாடு நடந்தது

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் சுயம்புவாக காட்சி தரக்கூடிய பஞ்சலிங்க தலம் என்று போற்றக்கூடிய வேண்டுதலை நிறைவேற்ற கூடிய பிர ஹத் சுந்தர குஜாம்பிகை உடனாய மகாலிங்கசுவாமி கோவில் உள்ளது

இக்கோவில் மிகவும் பிரசித்திப் பெற்ற கோயிலாகும் இக் கோவிலில் மகாலிங்கசுவாமி மூகாம்பிகை பெரு முலையாள் அம்பாள் ஆண்ட விநாயகர் நவகிரகம் தட்சிணாமூர்த்தி ஆகிய தெய்வங்கள் அருள்பாலித்து வருகின்றன

காவிரி தென்கரை தளத்தில் 30வது தலமாகவும் தேவாரத் தலங்களில் 274 தலமாகவும் மூகாம்பிகை சன்னதி உள்ள தலமாகவும் இக்கோவில் உள்ளது

இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத சோம வார விழாவை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம்

இந்தச் சங்கு அபிஷேகத்தில் திருவாவடுதுறை 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மகாலிங்க சுவாமியை தரிசனம் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version