
தெய்வீக தமிழக சங்கம்: தமிழகத்தில், ஹிந்து மக்களை ஒருங்கிணைக்க ‘தெய்வீக தமிழக சங்கம்’ துவக்கப்பட்டுள்ளது..
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடக்கவுள்ள நிலையில், ஹிந்துக்களை ஒருங்கிணைத்து பெரிய அளவில் ஓட்டு வங்கியை உருவாக்க வேண்டும் என பலரும் முயற்சித்து வருகின்றனர்.
முக்கியமாக ஆர்.எஸ்.எஸ்.,ன் சங்க பரிவார் அமைப்புகள் இந்த பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இதற்காக, ‘தெய்வீக தமிழக சங்கம்’ என்ற பெயரில் அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் மட்டுமின்றி, ஹிந்து முன்னணி, பா.ஜ.., மற்றும் ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ளவர்களும் இணைந்து வருகின்றனர்.
இந்த அமைப்பு மூலம் தற்போது நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம் என அனைத்து உள்ளாட்சி தலைமையிடத்திற்கும், ஐந்து முதல், 10 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அடுத்த கட்டமாக ஒவ்வொரு மண்டலம், வார்டு, கிராம ஊராட்சிகளுக்கு தனித்தனியாக பொறுப்பாளர்களை தேர்ந்தெடுப்பர். இந்த குழுதான் ஒவ்வொரு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், ஹிந்துக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவர்.
இவர்கள் எந்த அமைப்பில் இருந்தாலும், இன்னும், மூன்று மாதங்களுக்கு இது மட்டுமே முக்கிய பணியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தெய்வீக தமிழக சங்கத்தை சேர்ந்த குழுவினர் ஒவ்வொரு வீடாக சென்று, ஹிந்து மதம், அதன் பெருமைகள், தற்போது ஹிந்து மதத்தை யார் யார் கேவலமாக பேசுகின்றனர், எந்த அமைப்பினர் ஹிந்து மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர் என்பது குறித்து பேசுவர். அதுமட்டுமின்றி ஹிந்து மதம், தேசத்தின் வரலாறு குறித்த புத்தகங்களையும் விற்பனைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
தமிழ் பற்று இருக்கும், தமிழ் படித்து, தமிழ் போற்றி, தன் குழந்தைகளுக்கு, தமிழ் கற்று கொடுக்க வேண்டும், தமிழ் கலைகள் கற்பிக்க வேண்டும் என நினைக்கும், தமிழ் கலாச்சாரம் வளர்க்க வேண்டும் என நினைக்கும், தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டில் வளர்ந்த ஹிந்து அல்லாத வேற்று மதத்தவருக்கு இந்த சங்கம் என்ன சொல்லும்?
தமிழ்நாட்டு மக்கள், ஒன்று பட்டு, ஜாதி மதம் அற்று மகிழ்ச்சியாக உள்ளனர். தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் தமிழும், என்றும் மதம் சார்ந்து இருந்ததில்லை.
அவரவர் மதத்தினர் அவரவர் காப்பது அவரவர் விருப்பம். அதை மதிப்பதே மனிதனுக்கு அழகு. அனால் மறைமுகமாக வேறு பெயரில் அதை செய்வது திருட்டுத்தனமாக தெரிகிறது. அதுவும் “தமிழ் காப்போம்” என்ற பெயரில் செய்வது தமிழுக்கே செய்யும் துரோகம் என எனக்கு படுகிறது. என்னுடைய தமிழாசிரியர் என்றும் மதம் பற்றி கற்று கொடுக்கவே இல்லை. என்னுடைய தமிழாசிரியர் மறைந்த முத்து லட்சுமி அம்மா அவர்கள், வகுப்பறையில் இந்து முஸ்லீம் கிரிஸ்துவன் அணைத்து என மாணவ மாணவிகளும் ஒன்றாக கற்றோமே. இன்று வரை ஒன்றாக இருக்கின்றோமே.
Feedback: Suggested Name change:
பெரியாரை, வெறும் இ. வே. ரா என கூறும் இவர்கள், ஹிந்து வெறியர்கள். தமிழ் சங்கத்தில் சேரலாம் என்ற எண்ணத்துடன் நான் விசாரித்தேன். தமிழ் வளர்ப்பு , தமிழ் கலை மற்றும் கலகலாச்சாரம் வளர்ப்பு சம்பந்தமாக இவர்களுக்கு இந்த எண்ணமும் இல்லை என தெரிய வந்தது. இவர்கள் பேசுவது எல்லாம் இந்து மதம் தான்.
ஆகவே,
தமிழ் காக்க வேண்டும் என்ற பெயரில் இந்து மதம் காக்க வேண்டும் என்று கூறும் இவர்கள் , சங்கத்தின் பெயரை “தெய்வீக தமிழ் சங்கம்” என்பதற்கு பதிலாக “தெய்விக இந்து சங்கம்” என்று மாற்றிக்கொள்வது சரியாக இருக்கும். அதுவே அவர்கள் கொள்கைக்கு பொருந்தும். சங்கத்துக்கு வாழ்த்துக்கள்.
இப்படிக்கு – தமிழ் பற்று இருக்கும், தமிழ் விரும்பும், தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ் கலாச்சாரம் வளர்க்க விரும்பும், அணைத்து ஜாதிமதத்தினரும் சமம் என நினைக்கும், அணைத்து ஜாதிமதத்தினரருடன் ஒன்றாக பழகும் – ஒரு கிரிஸ்துவன்.
வாழ்க தமிழ். வளர்க தமிழ்.