Home உலகம் 14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை!

14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை!

teen-ager-height
teen ager height

ஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.

சீனாவிலுள்ள சிசுவான் பிராவின்சில் லெஷன் நகரத்தைச் சேர்ந்த ரென்கீயூ என்ற ஜூனியர் ஹைஸ்கூல் மாணவன் இந்த பெருமையை சாதித்துள்ளான். 7 அடி 3 அங்குல உயரத்தில் உலகிலேயே மிக உயரமான பையனாக பெயர் வாங்கியுள்ளான.

கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் வெப்சைட்டில் இந்த சிறுவனின் பெயரைச் சேர்த்தபின் அவன் உலகிலேயே உயரமான சிறுவனாக அறியப்படுகிறான்.

அக்டோபரில் கின்னஸ் புக் பிரதிநிதிகள் ரென்கீயூவின் உயரத்தை அளந்து இறுதி முடிவுக்கு வந்தார்கள். 221.03 சென்டி மீட்டர் உயரத்தில் உள்ளார் என்று கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது. இந்த மாணவன் 18 வயதை விட குறைந்த வயதிலேயே இந்த ரெக்கார்டை அடைந்துள்ளார்.

“நான் ஸ்கூலுக்குச் செல்லும் போது என் வயது பிள்ளைகளை விட நான் உயரமாக இருப்பதை கவனித்தேன். அதனால் எனக்காக பள்ளியில் பிரத்தியேகமான பர்னிச்சர்களை நான் அமைத்துக் கொண்டேன். பள்ளியில் அனைவரையும் விட நான்தான் மிகவும் உயரமாக இருப்பேன். நிறைய மாணவர்கள் என்னை வயது மிக அதிகமானவனாக தவறாக நினைப்பார்கள். அது எனக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது. அதனால் கின்னஸ் புக்கில் ரெக்கார்டு ஏற்படுத்தி என் உயரத்தை எனக்கு அனுகூலமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்” என்று தெரிவித்தான் ரென்.

இதற்கு முன் இந்த ரெக்கார்டு அமெரிக்காவைச் சேர்ந்த கெவின் பிராட்போர்ட் என்பவரின் பெயரில் இருந்தது. அவர் ரென்னை விட ஐந்து சென்டிமீட்டர் உயரம் குறைவாக இருந்ததால் இரண்டாவது இடத்திற்கு இறக்கப்பட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version