ராசுமதுரவன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான திரைப்படம் மாயாண்டி குடும்பத்தார். குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை இப்படம் உணர்த்தியது. எனவே, இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப்படமானது. இப்படத்தில் சீமான், தருண் கோபி, மணி வண்ணன், ராஜ் கபூர், பொன் வண்ணன் உட்பட 10 இயக்குனர்கள் நடித்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது இப்படத்தின் 2ம் பாகம் தயாராகி வருகிறது. ராசுமதுரவன் மரணம் அடைந்துவிட்டதால், 2ம் பாகத்தை கல்லூரி வாசல் உள்ளிட்ட சில படங்களை இயக்கிய நந்தா பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தில் கௌதம் கார்த்திக் நடிப்பது உறுதியாகியுள்ள. மற்ற நடிகர், நடிகையர் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத்தெரிகிறது.