நடிகர் விஜய் சேதுபதி எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவர். தற்போது ஜனநாதன் இயக்கத்தில் லாபம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தை விஜய் சேதுபதியே தயாரித்து வருகிறார். தற்போது இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் வித்தியாசமான கெட்டப்பில் விஜய் சேதுபதி அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. லுங்கி, சட்டை, கோட், செம்பட்டை முடி, பெரிய மீசை, கண்ணாடி, அருகில் ரத்தக்கறை உள்ள பெரிய கத்தி என விஜய் சேதுபதி டெரர் லுக்கில் இருக்கிறார்.