சின்னத்திரை சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு எப்போதும் பெரிய திரையான சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கும். எனவே, வித்தியாசமாக மற்றும் கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி தங்களின் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார்கள். யாரேனும் ஒரு இயக்குனர் அதை பார்த்து நமக்கு வாய்ப்பு தர மாட்டார்களா என்பதுதான் நோக்கம். மேலும், ரசிகர்களிடையே பிரபலமாகவும் அதை அவர்கள் செய்வதுண்டு.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பொன்மகள் வந்தாள்’ சீரியலில் நடித்துவர் ஆயிஷா. திடீரென சில காரணங்களால் அந்த தொடரிலிருந்து வெளியேறினார். தற்போது ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சத்யா’ சீரியலில் நடித்து வருகிறார்.
இவர் தனது புகைப்படங்களை தொடர்ந்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.சமீபத்தில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.