Home அடடே... அப்படியா? தமிழகத்தைக் குறிவைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகள்: நடவடிக்கை கோரும் இந்து முன்னணி!

தமிழகத்தைக் குறிவைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகள்: நடவடிக்கை கோரும் இந்து முன்னணி!

pakistaniboat1

இஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா?
கடலோர காவல்படை, மத்திய, மாநில அரசுகளின் புலனாய்வு துறை ஆகியன கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.. என்று, அந்த அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

நவம்பர் 26 மும்பை கடல் பகுதி வழியாக நுழைந்த, பாகிஸ்தானின் இஸ்லாமிய பயங்கரவாதிகள் 8 இடங்களில் நடத்திய தாக்குதலில் 164பேர் உயிரிழந்தனர். அதே நாளான நேற்று தூத்துக்குடியில் 30 டன் ஹெராயின் போதைப்பொருள், 5 கைத்துப்பாக்கிகளுடன் பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. தொடர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும் வருகிறது.

pakistaniboat

கடந்த சில நாட்கள் முன்பு இராமநாதபுரம் பெரிய பட்டினத்தில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர், ரகசிய பயிற்சி முகாம் நடத்தியுள்ளனர். அதில் 32 பேர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதில் சுமார் 130 பேர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த பயிற்சி முகாமும் காவல்துறைக்குத் தெரியாமல் நடந்துள்ளது.

அமரர் வீரத்துறவி இராம கோபாலன் அவர்கள், தமிழக கடலோர பகுதிகள் மூலம் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம். மத்திய, மாநில அரசுகள் கடலோர காவல்படையை கடுமையாக கண்காணிக்க வேண்டும் என்று மும்பை தாக்குதலுக்கு முன்பே எச்சரித்தார். இன்று அவரது தீர்க்க தரிசனத்தை நாம் உணர்கிறோம்.

pakistan boat in thuthukudi

கடந்த ஜனவரி மாதம், கன்னியாகுமரி களியக்காவிளை சோதனை சாவடி பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் வில்சனை, முஸ்லீம்கள் இருவர் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

vpjayakumar
vpjayakumar

சட்டவிரோத, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை சிறைச்சாலைகளில் அடைக்கும்போது, அவர்களை சந்திக்க வருபவர்களையும், வழக்கு விசாரணையில் பயங்கரவாதிகளுக்குத் துணைபுரிபவர்களையும் கண்காணிக்க வேண்டும்.

இத்தகைய சூழலில் தமிழகத்தின் பாதுகாப்பில் மத்திய, மாநில அரசு புலானய்வுத் துறையும், கடலோர காவல்படையும் தொடர் கண்காணிப்பு மற்றும் கடுமையான நடவடிக்கையை எடுத்து தமிழகத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version