இன்று அதிகாலை திருவண்ணாமலை திருஅண்ணாமலையார் திருக்கோயிலில் பரணிதீபம் ஏற்றப்பட்டது. இதை முன்னிட்டு, இன்று அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை சிறப்பாக நடைபெற்றது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20ஆம் தேதி தீபத் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் ஜோதி வடிவாகக் காட்சி அளித்தல், பார்வதிக்கு சிவபெருமான் இட பாகம் வழங்கிய லீலை ஆகியவற்றை நினைவுகூர்ந்து, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருடம் தோறும் நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் இன்று காலை 4 மணிக்கு, நிலம், நீர், காற்று, அக்னி, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களும் சிவபெருமானே என்பதைக் காட்டும் வகையில் அண்ணாமலையார் கருவறை எதிரில் ‘ஏகன், அனேகன்’ என்ற பரணி தீபம் ஏற்றப்பட்டது.!
முன்னதாக, நேற்று காலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ள கொப்பரை அண்ணாமலை உச்சிக்கு நேற்று காலை கொண்டு செல்லப்பட்டது.
ஞாயிறு இன்று மாலை 6 மணி அளவில் திருக் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.
செய்தி: எஸ்.ஆர்.வி.பாலாஜி, திருவண்ணாமலை
திருவண்ணாமலை பரணி தீபம் படங்கள்…