Home அடடே... அப்படியா? காவல்துறையை கண்டித்து… செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்!

காவல்துறையை கண்டித்து… செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்!

vhp-protest-in-sengottai1
vhp-protest-in-sengottai1

செங்கோட்டையில் விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 72பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் பண்பொழி திருமலைக்கோவில், திருமலைக்குமாரசாமி கோவில் அடிவாரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஏற்றப்பட்ட கொடியை இரவோடு இரவாக அகற்றிய காவல் துறையை கண்டித்து விஎச்பி மற்றும் இந்து இயக்கங்கள் சார்பில் செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

vhp-protest-in-sengottai

ஆர்ப்பாட்டத்திற்கு விஎச்பி நகர செயலாளா் முத்துக்குமார்தலைமைதாங்கினார். மாநில தலைவா் பெரி.குழைகாதா், குமரி கோட்ட பொறுப்பாளா் சுப்பையா, மாவட்டத்தலைவா் வன்னியராஜன், மாவட்ட இணைச்செயலாளா் குருசாமி, துணைத்தலைவா் சரவணக்குமார், பஜ்ரங்தள் அமைப்பாளா் அருண்குமார், இணைச்செயலாளா் ராஜேஷ், மணிகண்டன், வார்டு தலைவா் முத்துக்குமார், விஎச்பி தென்காசி நகரத்தலைவா் சுப்பிரமணியன், பஜ்ரங்கதள் மாவட்ட அமைப்பாளா் சபரிமணி, நகர பொறுப்பாளா் மணிகண்டன், மாவட்ட இணைச்செயலாளா் மாரியப்பன், விவசாய அணி பொதுச்செயலாளா் முத்துமாரியப்பன், மாவட்ட அரசு தொடா்பு பிரிவு செயலாளா் மகேந்திரபாண்டியன், செங்கோட்டை நகர தலைவா் வேம்புராஜ், செயலாளா் சந்திரன், இந்து முன்னனி மாவட்ட துணைத்தலைவா் முருகன். நகரத்தலைவா் மூா்த்தி, ஒன்றியத்தலைவா் குளத்துாரன், உள்பட பலா் கலந்து கொண்டனா். தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த விஎச்பி மற்றும் இந்து முன்னணியினரை செங்கோட்டை காவல் துறையினா் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் டிசம்பர் 6தினம் வருவதை முன்னிட்டு காவல்துறை சார்பில் தென்காசி டிஎஸ்பி பொறுப்பு சுவாமிநாதன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் செங்கோட்டை நகரத்தின் முக்கிய பகுதிகள் வழியாக அணிவகுப்பு பேரணி நடத்தினர்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version