Home கட்டுரைகள் நவ.30: இன்று குருநானக் ஜெயந்தி!

நவ.30: இன்று குருநானக் ஜெயந்தி!

guru nanak
guru nanak

இன்று நவம்பர் 30 கார்த்திகை பௌர்ணமி குருநானக் ஜெயந்தி.
குருநானக் ஜெயந்தி குறித்து ஆர்வமூட்டும் செய்திகளை அறிந்து கொள்வோம்.

குருநானக் ஜெயந்தியை    உலகமெங்கும் இருக்கும் சீக்கியர்கள் இந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி கொண்டாடுகிறார்கள். குருநானக் ஜெயந்திக்கு பிரகாச பர்வம், குரு பரஃப் என்றுகூட பெயர்கள் உள்ளன. இன்று சீக்கியர்கள் புனித நூலான குரு கிரந்த சாகிப்பை இடைவிடாமல் பாராயணம் செய்வார்கள்.

பல்லக்கில் குரு கிரந்த சாகிப்பை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது அதிலுள்ள சாராம்சங்களின் ஆதாரமாக எழுதப்பட்ட கவிதைகளைப் பாடுவார்கள். பூக்களால் அலங்கரித்த ரதத்தில்  குரு கிரந்த சாகிப் எடுத்துச் செல்வார்கள். இந்த புனித தினத்தன்று கிரந்த சாகிப் செய்யுட்களை ஜபம் செய்வார்கள்.

gurunanak quote

குருநானக் ஜெயந்தி சீக்கியர்களுக்கு மிகவும் முக்கியமான தினம். சீக்கிய மதத்திற்கு பத்து குருமார்கள் உள்ளனர். ஒவ்வொருவருக்கும் குருபரஃப் உள்ளது. சீக்கிய மக்களின் முதல் குருவான குரு நானக் பிறந்தநாள் என்பதால் சீக்கியர்களின் மதத்திற்கு அடித்தளமிட்டவர் ஆனதால் குருநானக் ஜெயந்தியை மிக உற்சாகத்தோடு நடத்துகிறார்கள்.

அவருடைய பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் (சாந்திரமானத்தை) சந்திரனின் காலண்டர்படி மாறிவரும். இந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி கொண்டாடுகிறார்கள்.இதன் தொடர்பாக இந்த பண்டிகை குறித்து வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வோம்.

குருநானக் தேவ் 1479 ராம் பீயோடி தல்வாடி கிராமத்தில் கார்த்திகை பவுர்ணமி அன்று பிறந்தார். இது அப்போதைய டெல்லி சுல்தானேட் பிராவின்சியில் இருந்தது. தற்போது இந்த இடம் நக்கனா சாகப் என்று அழைக்கப்படுகிறது. இது இப்போது பாகிஸ்தானில் உள்ளது.

குருநானக்கின் பெற்றோர்    கல்யாண் சந்த் தேவ்  மற்றும் மாதா திருப்தி என்று  கூறுவர். 

குருநானக் இந்து மற்றும் இஸ்லாம் மதங்களை பற்றி ஆழமான ஞானத்தை அறிந்து கொண்டார். அதன் மூலம் அவர் அவற்றின் தத்துவங்களை நன்றாக அறிந்தார் என்று வரலாறு  கூறுகிறது.
இவருடைய போதனைகளின்படி  பக்தர்கள்  கடவுளோடு இணைய முடியும் என்றும்  எந்தப்  பெயரால் வேண்டுமானாலும் கடவுளை வழிபட முடியும் என்றும் கூறப்படுகிறது.

அவ்வாறு அவர் 15 ஆவது நூற்றாண்டில் சீக்கிய மதத்தை ஸ்தாபித்தார். குருநானக் தேவ் போதனைகள் சீக்கிய மக்களின் பவித்திரமான குரு கிரந்த் சாகிப்பில் பத்திரப்படுத்தப் பட்டுள்ளன. குருநானக் போதனைகளில் நன்மை, தூய்மை, மற்றும்  சுயநலம் அற்ற சேவை இவற்றின் தர்மம் ஆதாரமாக பல சூத்திரங்கள் உள்ளன.

குரு கிரந்த சாகிப் ஒரே கடவுளின் பெயர் மீது விசுவாசம் மற்றும் தியானத்தின் முக்கியத்துவத்தை குறிப்பிடுகிறது. நேர்மையோடு கூடிய நடத்தைக்காக மற்றும் அனைவருக்கும் சமுதாயத்தில் நீதி எடுத்து வருவதற்காக முயற்சிக்கிறது. குருநானக்தேவின்  போதனைகள் சர்வசக்தி உள்ளவரான கடவுளிடம் இருந்து நேரடியாக பெறப்பட்டவையாக ஏற்கப்படுகின்றன.

1496 ஆம் ஆண்டு குருநானக் தன் போதனைகளை பரப்புவதற்காக ஆன்மீக பிரயாணத்தில் 30 ஆண்டுகள் காலம் தன் குடும்பத்தை விட்டு விலகி இருந்தார்.

குருநானக் மற்றும் அவருடைய போதனைகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் அவருடைய பிறந்த நாள் தொடர்பாக அவரை நினைவு கொள்வதற்கும் மக்கள் குருநானக் ஜெயந்தியை பிரகாஷ்  பர்வ் அல்லது குருபரஃப் ஆக கொண்டாடுகிறார்கள்.

சீக்கிய மக்கள் குரு பரஃபுக்கு 15 நாட்கள் முன்பாகவே ஒவ்வொரு நாளும் விடியற்காலையில் பிரபாத் பெர்ரி அதாவது மார்னிங் மார்ச் செய்வார்கள். இந்த பண்டிகைக்கு இரண்டு நாட்கள் முன்பு அகண்ட பாட் அதாவது குரு கிரந்த சாகிப் 48 மணி நேரம் படிப்பார்கள். அதேபோல் ஜெயந்தி பண்டிகைக்கு   ஒரு நாள் முன்பு நகர சங்கீர்த்தனம் ஏற்பாடு செய்வார்கள். 

குருநானக் போதனைகளை அனுசரிப்பதற்கு பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள். இதில் காமம் கோபம் பேராசை பற்று அகங்காரம் என்ற ஐந்து கெட்ட குணங்களை  விட்டு நீங்குவதற்கு பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள்.

குருநானக் தேவ் கூறியபடி சீக்கிய மதத் தொடர்புடைய மூன்று மார்க்கதரிசன  சூத்திரங்கள் உள்ளன. இறைவனை எப்போதும் நினைவில் நிறுத்த வேண்டும், சுயநலமின்றி மக்களுக்கு சேவை செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும், உங்களிடம் உள்ளவற்றைப் பிறரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

குருபரப் அன்று விடியற்காலை 4 மணிக்கே பிரார்த்தனைகளை தொடங்குகிறார்கள். இந்த நேரத்தை அமிர்த நேரம் என்று குறிப்பிடுகிறார்கள். பக்தர்கள் காலை ஸ்லோகங்கள், பவித்திர கதைகள் பாடுகிறார்கள்.

அதன்பின் சீக்கிய சம்பிரதாயப்படி ஸ்லோகங்களை பாடுகிறார்கள். அப்போது    கம்யூனிட்டி கிச்சன் குருத்வாரா வளாகத்தில் நிர்வகிக்கிறார்கள். லங்கர் நிர்வகிப்பது  குலம் மதம் மற்றும் கலாச்சாரம் இவற்றை பார்க்காமல் மக்கள் அனைவருக்கும் உணவளிப்பது. இவ்வாறு சுயநலமற்ற சேவையில் ஈடுபடுவார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version