விரைவில் நிர்வாகிகளை சந்தித்து புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்துவேன் என்றும், இந்தத் தேர்தலில் என் பங்கு இருக்கும் என்றும் மு.க.அழகிரி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
மதுரை வில்லாபுரம் பகுதியில் அண்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த திமுக நிர்வாகி எஸ்.ஆர்.மருதுவின் வீட்டிற்கு சென்று அவருடைய உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவரிடம் திமுக.,வில் இணைவீர்களா, இணைப்பு உண்டா என்றெல்லாம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அழகிரி, வரும் 2021சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும் எனவும், புதிய கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு விரைவில் நிர்வாகிகளை ஆலோசித்து எனது முடிவை அறிவிப்பேன் , போக போக எனது முடிவு தெரியும் என்றும் கூறினார்
தயாநிதிக்கு திமுகவில் முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளதாகவும் முக்கியப் பொறுப்புகள் கொடுக்கப் படலாம் என்றும் வரும் தகவல் குறித்த கேள்விக்கு, அமித்ஷாவை நான் சந்திக்கப் போவதாக கூறிய வதந்தியைப் போல தான் இதுவும் என்றார்.