ஏப்ரல் 19, 2021, 2:39 காலை திங்கட்கிழமை
More

  மதுரையில் மையம் கொண்டுள்ள ‘அழகிரி’ புயல்; திமுக.,வுக்கு பெரும் பாதிப்பு உண்டாகும்!

  மதுரையில் மையம் கொண்டுள்ள மு.க.அழகிரி என்கிற புயலால் திமுகவுக்கு பாதிப்பு உண்டாகும் என்று மக்கள் பேசுகிறார்கள்

  udayakumar-minister
  udayakumar-minister

  மதுரையில் மையம் கொண்டுள்ள மு.க.அழகிரி என்கிற புயலால் திமுகவுக்கு பாதிப்பு உண்டாகும் என்று மக்கள் பேசுகிறார்கள் என, மதுரையில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

  மதுரையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, புரெவி இலங்கையில் கரையை கடப்பதாக தகவல் வந்துள்ளது, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

  புரெவி புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது, தமிழக அரசு எச்சரிக்கை விடுத்த மாவட்டங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், புயல்கள் வருவதற்கு முன்னரே முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது!

  புயலால் உயிர் மற்றும் பொருட்கள் சேதம் இல்லாமல் புயலை எதிர்க்கொள்ள நடவடிக்கை, கஜா புயலில் 1 இலட்சம் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர், நிவர் புயலில் 2 இலட்சத்து 30 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டனர்,

  1,295 கோடி மதிப்பில் முல்லை பெரியாற்றில் இருந்து குடிநீர் திட்டத்தை டிச 4 ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார், புதிய திட்டத்தால் 50 ஆண்டுகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்படும், 30 ஆண்டுகளில் செய்ய வேண்டிய திட்டங்களை மதுரைக்கு 3 ஆண்டுகளில் முதல்வர் வழங்கி உள்ளார்

  புரெவி புயலின் வீரியத்தை அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது, புயலின் நிலையை கண்காணித்த பிறகு தான்
  விடுமுறை குறித்த அறிவிப்பு கொடுக்க முடியும்

  திமுகவில் ஒரு பூகம்பம் உருவாகும், பூகம்பம் வலு பெருமா வழு பெறாத என தெரியவில்லை, மதுரையில் மையம் கொண்டுள்ள மு.க.அழகிரி என்கிற புயலால் திமுகவுக்கு பாதிப்பு உண்டாகும் என மக்கள் பேசுகிறார்கள்

  திமுக ஆட்சி காலத்தில் கட்ட பஞ்சாயத்து, ரவுடியிசம் இருந்தது, 2021 ல் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்க மக்கள் முன் வந்துள்ளனர்

  புயல் வரும்போது முதல்வர் சூறாவளியாக சுழன்று நடவடிக்கைகள் எடுத்தார், கொரோனா காலகட்டத்தில் திமுகவினர் களத்திற்கு வரவில்லை

  கொரோனா காலகட்டத்தில் திமுகவினர் எங்கே சென்றார்கள், களத்தில் தீவிரமாக பணியாற்றியதால் கொரோனா குறைந்து வருகிறது” என தெரிவித்தார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,114FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »