ஏப்ரல் 20, 2021, 3:13 காலை செவ்வாய்க்கிழமை
More

  அம்பேட்கர் என்ன.. உன் அப்பன் வீட்டு சொத்தா? : விசிக., – இந்து மக்கள் கட்சியினரிடையே மோதல்!

  அம்பேத்கர் மணிமண்டபத்தை பூட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். இடையூறுகளை மீறி, அர்ஜுன் சம்பத் அம்பேட்கர் சிலைக்கு

  arjun-sampath
  arjun-sampath

  அம்பேட்கர் சிலைக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மாலை அணிவிக்க முயன்றபோது, அதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்  எதிர்ப்பு தெரிவித்தனர்.  அம்பேத்கர் மணிமண்டபத்தை பூட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். இடையூறுகளை மீறி, அர்ஜுன் சம்பத் அம்பேட்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். 

  அர்ஜுன் சம்பத் முன்னிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும் இந்து மக்கள் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இச்செயல் மிகவும் கண்டிக்கத் தக்கது என சமூகத் தளங்களில் கருத்துகள் எழுந்தன. 

  இன்று அம்பேத்கர் தினத்தை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தனது தொண்டர்களுடன் சென்றார் அப்போது அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் சென்னை அம்பேத்கர் மணி மண்டபத்தின் கதவை பூட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டனர் 

  அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சனாதன தர்மத்தை வேரறுப்போம் என்று கோஷம் எழுப்பினர் மேலும் காவியை அழிப்போம் என்று முழக்கமிட்டனர்… அர்ஜுன் சம்பத்துக்கு எதிராக கோஷம் எழுப்பியதுடன் இந்து மதத்தை அவமதிக்கும் வகையிலும் இந்து தர்மத்திற்கு எதிராகவும் வன்முறையை தூண்டும் கோஷங்களை எழுப்பினர் 

  அவ்வாறு இந்து மதத்திற்கு எதிராக தோஷங்கள் எழுப்பிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருவர் இஸ்லாமிய மத அடையாளங்களுடன் நின்று கொண்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை கையில் ஏந்திக்கொண்டு அர்ஜுன்சம்பத் அணிந்திருந்த காவி துண்டை பறிக்க முயற்சி செய்தனர். அப்போது காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ஐந்து பேரை மட்டும் உள்ளே செல்ல அனுமதித்தனர். 

  நக்சல் அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஈவேரா., தொண்டர்கள் என சிலர்,  அர்ஜுன் சம்பத்தை சுற்றி வளைத்து மண்டபத்திற்கு உள்ளே அராஜக வன்முறை கோஷங்கள் எழுப்பினர். இந்த இடையூறுகளை மீறி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் வெளியே வந்தனர்

   இதை அடுத்து இந்த சம்பவத்துக்கு எதிரொலியாக சென்னையில் உள்ள ஐந்து அம்பேத்கர் சிலைக்கு இன்று மாலை அணிவிப்போம் என்று தெரிவித்த அர்ஜுன் சம்பத் விடுதலை சிறுத்தைகளின் இந்த வெறுப்பு அரசியல் மிகவும் கண்டிக்கதக்கது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை இது குறித்து கவனம் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார் 

  மேலும், இந்து மக்கள் கட்சியுடன் இணைந்து இந்து பறையர் பேரவையின் தலைவர் ராஜசேகர் தலைமையில் நூற்றுக் கணக்கான தொண்டர்கள் மற்றும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டிருந்தனர் என்றும்,  நாம் அனைவரும் அம்பேத்கர் வழி நடப்பவர்கள் ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஈவேரா கொள்கை வழி நடப்பவர்கள்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் அம்பேத்கர் கொள்கைகளுக்கும் என்ன சம்பந்தம்? விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் இந்த அராஜக நடவடிக்கைகளுக்கு யார் முற்றுப் புள்ளி வைப்பது? காவல்துறை அரசாங்கம் ஆகியவை இது குறித்து கவனம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் அர்ஜுன் சம்பத். 

  இதனிடையே அம்பேத்கர் என்ன விடுதலை சிறுத்தைகள் அப்பன் வீட்டு சொத்தா என்று சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. மேலும் சனாதனத்தை வேரறுப்போம் என்று கூறிக்கொண்டு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் புகுந்தபோது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இப்படித்தான் யாராவது சூழ்ந்துகொண்டு கோயிலுக்குள்ளே விடாமல் போராட்டம் நடத்தினார்களா அல்லது தாக்குதல் கொடுத்தார்களா என்று கேள்வி எழுப்பிய பலரும் அரசியல் அநாகரீகத்தின் உச்சமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நடந்து கொண்டிருப்பது தொடர்கதையாகி வருகிறது என்றும் குறிப்பிட்டனர்

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,114FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »