ஏப்ரல் 20, 2021, 2:49 காலை செவ்வாய்க்கிழமை
More

  கூகுள் பே, போன் பே மூலம் பணம் அனுப்ப 30% கட்டணம்! இந்த வதந்தி பரவ… ‘தமிழண்டாவ்’ தான் காரணமாம்!

  வரும் 2021 ஜனவரி 1 முதல் Google Pay, PhonePe மூலம் பணம் அனுப்ப 30% கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என குறிப்பிடப்பட்டு

  factcheck
  factcheck

  2021 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது! கூகுள் பே, போன் பே மூலம் பணம் அனுப்பவும் 30% கட்டணம்! – என்று அண்மையில் ஒரு செய்தி நாளிதழில் வெளியாகி ஸ்மார்ட் போன் பயனாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதுடன், சமூகத் தளங்களில் பெரும் விவாதப் பொருளும் ஆனது.

  அதில், வரும் 2021 ஜனவரி 1 முதல் Google Pay, PhonePe மூலம் பணம் அனுப்ப 30% கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

  இந்தத் தகவல் சமூகத் தளங்களில் பரவி, மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வேலை வைத்தது. ரொம்பவே உணர்ச்சி வசப்பட்ட சிலர், நாங்க சாப்பிடவும் தூங்கவும் எவ்வளவு கட்டணம்னு சொல்லிடுங்க என்று குறிப்பிட்டு, மத்திய அரசுக்கு எதிரான வெறுப்பை உமிழும் வாசகங்களுடன் மீம்ஸ் பரப்பினர்.

  போன நூற்றாண்டில் பாரதி பாடிய போது, கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று இருந்தது தமிழகம். இப்போது, ஈவேரா.,யிசம் தலை தூக்கி திராவிட கழகங்களின் ஆட்சியில் ஒரு தகவலை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற திறன் கூட இன்றி, பொய்களைத் திரித்தும் பரப்பியும் வாழும் மூடர்கூடமாக மாறியிருக்கிறது தமிழகம். அதற்குச் சான்றுதான் இந்தத் தகவலும் அதை வைரலாக்கப் பட்ட பாடும்!

  சமூகத் தளத்தில் பரவிய இந்தச் செய்தி குறித்து, வடநாட்டு ஊடகங்கள் உண்மை கண்டறியும் Fact Check மூலம் தேடி, இது ஒரு பொய்யான செய்தி என்று தகவல் வெளியிட்டன. காண்க : Fact Check: UPI Payments Will Not Cost 30 Per Cent Transaction Charges, Viral Claim Is Fake

  factcheck1
  factcheck1

  இந்தக் கட்டுரையில், பேஸ்புக் பயனர் Philiphs Jp என்பவர் இதைப் பகிர்ந்து, 1000 ரூபா அனுப்ப 300 ரூபா கூடுதல் கட்டணமா என்று கேள்வி எழுப்பி திகில் கிளப்பியிருந்தார். மேலும் இது தமிழகத்தில் சேலத்தில் இருந்து பகிரப் பட்டிருக்கிறது என்று கூறியுள்ளது அந்தக் கட்டுரை!

  சரி… இப்போது மேற்கண்ட தகவலின் உண்மையான செய்தி என்ன?!

  பொதுவாக ஆன்லைன் மூலமாக பண பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காகத்தான் யுபிஐ (UPI : Unified Payments Interface) என்ற வசதியே மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்ட தருணங்களில், யுபிஐ மூலமே அதிக அளவில் பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப் பட்டன. இதனை மத்திய அரசு ஊக்கப் படுத்தி சலுகைகளும் அறிவித்தது.

  அண்மையில் UPI மூலமாக மாதத்துக்கு 2 பில்லியனுக்கும் மேற்பட்ட பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்தது. இது வரவேற்கப்படக்கூடியது தான்! எனினும், இதில், தனியார் நிறுவனங்கள் ஓரிரண்டு மட்டும் பயனடைவதும், இந்தச் சந்தையில் போட்டியற்ற தன்மை உருவாகி, ஒட்டுமொத்தமாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனையில் 80% பண பரிவர்த்தனைகள் Google Pay, PhonePe என்ற இரண்டு ஆப்களால் மட்டுமே மேற்கொள்ளப்படுவதும் பெரும் கவனத்துக்கு உள்ளானது.

  இதுதான் தற்போது சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. சில நிறுவனங்கள் மட்டுமே ஒட்டுமொத்த சிஸ்டத்தையும் பயன்படுத்துவது ஆரோக்கியமானது இல்லை என்ற கருத்து எழுந்தது. இதனை என்சிபிஐ தீவிரமாக யோசித்தது.

  இதை அடுத்து தான், ஜனவரி 2021 முதல் ஒவ்வொரு நிறுவனமும் ஒட்டுமொத்தமாக மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனையில் 30% மட்டுமே அதிகபட்சமாக மேற்கொள்ள வேண்டும். அதாவது ஒரு மாதத்திற்கு யுபிஐ மூலமாக 100 பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றால் கூகுள் பே அதிகபட்சமாக 30 பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என்பதுதான் இந்தக் கட்டுப்பாடு.

  இப்படி கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலம் குறிப்பிட்ட நிறுவன் மூலம் அதிகப்படியான ஓவர்லோடு ஆவதை தவிர்க்க முடியும் என கருதுகிறது என்சிபிஐ.

  இருப்பினும், அந்த 30% பரிவர்த்தனைக்கும் அதிகமாக அதற்கு மேல் ஒரு நிறுவனம் பண பரிவர்த்தனை மேற்கொள்ள முயன்றால் என்னவாகும் என்ற கேள்விக்கு தெளிவான பதில் இப்போது இல்லை. அதே நேரம், 30%த்துக்கும் கூடுதலாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க வாய்ப்பிருப்பதாக கருதப் படுகிறது.

  npci
  npci

  அப்படி என்றால், கூகுள் பே, போன் பீ போன்றவற்றின் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது, அந்தக் கட்டணத்தை பயனர்கள் செலுத்த வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது!

  இப்போது ஏடிஎம்.,களுக்கு உள்ள கட்டுப்பாடுகளைப் போல் இவற்றுக்கும் வரலாம் என்று கருதுகின்றனர்.

  முன்னர் கூகுள் பே மூலமாக பரிவர்த்தனை மேற்கொள்ள அமெரிக்காவில் மட்டுமே கட்டணம் என்றும் இந்தியாவில் இலவசம் என்றும் விளக்கம் அளித்தது கூகுள். தற்போது என்சிபிஐ 30% பரிவர்த்தனை மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என கட்டுப்பாடு விதிப்பதால் கூகுள் , போன் பீ நிறுவனங்கள் சில கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப் படுகிறது.

  அந்த வகையில் ஏடிஎம்.,க்கு இருப்பது போல், ஒரு பயனர், ஒரு மாதத்திற்கு 4 அல்லது 5 பரிவர்த்தனைகள் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்றும், அதற்கு மேல் மேற்கொள்ளப் படும் பரிவர்த்தனைகளுக்கு சிறிதளவு கட்டணம் வசூலிக்கப் படலாம் என்றும் கூறப் படுகிறது.

  paper-cutting-news-of-google-pay-phone-pe
  paper-cutting-news-of-google-pay-phone-pe

  மேலும், பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க இதுவரை கூப்பன் கொடுப்பது, பணம் வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்ட Gpay, PhonePe நிறுவனங்கள், அவற்றை நிறுத்தக் கூடும் என்று தெரிகிறது.

  இந்த 30% அதிகபட்ச பரிவர்த்தனை அளவு என்பது, வரும் காலத்தில் வாட்ஸ் அப்புக்கு ஒரு தலைவலியாக மாறலாம். பல்லாண்டு முயற்சிகளுக்குப் பின் இப்போதுதான் வாட்ஸ் அப் இந்தத் துறையில் இறங்குகிறது. இந்தியாவில் வாட்ஸ் அப் பயனர்கள் எண்ணிக்கை அதிகம். வாட்ஸ்ஆப்பில் பண பரிவர்த்தனை வசதி கொண்டுவரப்பட்டால் அதிகம் பேர் அதைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 30% பரிவர்த்தனை கட்டுப்பாடு வாட்ஸ் அப்புக்கு ஒரு பின்னடைவுதான்!

  எனவே, இந்த செய்திகளில் கூறப் பட்ட படி, கூகுள் பே, போன் பீ பயனாளர்கள் தாங்கள் மேற்கொள்ளும் பண பரிவர்த்தனைக்கு 30% கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. மாறாக, பயன்பாட்டில் சில கட்டுப்பாடுகள் வரக்கூடும்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,114FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »