ஏப்ரல் 21, 2021, 5:12 மணி புதன்கிழமை
More

  ஜெகனின் ஆந்திராவில் அவலம்: கிருஷ்ணர் கோயிலில் ரத்தமும் மாமிசமும் வீசி அசிங்கம்!

  முதல்வர் ஜெகன் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் முன்னாள் எம்எல்ஏ பூச்சிபல்லி மீது எம்எல்ஏ மத்திசெட்டி வேணுகோபால் கடுமையாக விமர்சனம்

  andhra-prakasam-district-krishna-temple
  andhra-prakasam-district-krishna-temple
  • ஆந்திர பிரதேசத்தில் பிரகாசம் மாவட்டத்தில் கிருஷ்ணர் கோவிலில் அசிங்கம்
  • இரத்தத்தை தெளித்து மாமிசத் துண்டுகளை வீசி எறிந்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

  பிரகாசம் மாவட்டம் தர்சி என்ற நகரில் மேற்கு பஜாரில் உள்ள ஶ்ரீகிருஷ்ணர் கோவிலில் ரத்தமும் மாமிசத் துண்டுகளும் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  பிரகாசம் மாவட்டத்தில் தர்ஷி அண்மையிலுள்ள ஸ்ரீ கிருஷ்ணா கோவிலில் அபச்சாரம் நேர்ந்துள்ளது. தர்சி மண்டலம் மேற்கு பஜாரில் உள்ள கோவிலில் ரத்தமும் மாம்ஸம் துண்டுகளும் காணப்பட்டதால் பரபரப்பாக உள்ளது.

  நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் கோவில் வளாகத்தில் ரத்தத்தைத் தெளித்து மாமிசத் துண்டுகளை வீசி எறிந்து உள்ளார்கள். கோவில் சுவர்களில் ரத்தத்தால் கை முத்திரையைப் பதித்துள்ளார்கள்.

  அதுமட்டுமின்றி ஆலய வளாகத்தில் உள்ள முன்னாள் எம்எல்ஏ பூச்சேபல்லி சிவபிரசாத்ரெட்டி அமைத்த கல்வெட்டின் மீது கூட ரத்தத்தை பூசி உள்ளார்கள்.

  கோவில் வளாகத்திலேயே ஏதோ ஜந்துவை கொன்றிருக்க வேண்டுமென்று உள்ளூர் மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கோவிலில் அபசாரம் நேர்ந்தது குறித்து உள்ளூர் மக்கள் வருத்தத்தில் உள்ளார்கள்.

  கோவிலுக்கு வரும் பக்தர்களை அச்சமூட்டுவதற்காகவே இதுபோன்ற கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கிறார்கள். தர்சியில் இது போன்ற சம்பவம் நேர்ந்ததால் பல சந்தேகங்கள் வெளிப்படுகின்றன.

  இதற்கு பின்னால் அரசியல் நோக்கம் இருக்கிறது என்று மக்கள் நிச்சயமாகவே கூறுகிறார்கள். அமைதிக்கு இருப்பிடமாகத் தர்சியில் இதுபோன்ற ஒரு சம்பவம் நேர்ந்து உள்ளதால் பல சந்தேகங்கள் ஏற்படுகின்றன.

  இதன் பின்னால் அரசியல் நோக்கம் இருக்கும் என்று சந்தேகம் ஏற்படுகிறது. முன்னாள் எம்எல்ஏ பூச்சிபல்லி மீது கோபத்தில் இவ்வாறு செய்திருக்கலாம் என்று பலரும் கூறுகிறார்கள்.

  நேற்று தர்சியில் நடந்த முதல்வர் ஜெகன் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் முன்னாள் எம்எல்ஏ பூச்சிபல்லி மீது எம்எல்ஏ மத்திசெட்டி வேணுகோபால் கடுமையாக விமர்சனம் செய்த அதே நாள் இரவில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் அரசியல் நோக்கமே காரணமாக இருக்கும் என்று எங்கும் சந்தேகத்தால் மக்கள் பேசி வருகிறார்கள்.

  உள்ளூர் மக்கள் புகார் அளித்ததால் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து சேர்ந்து விசாரித்து வருகின்றனர்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »