ஏப்ரல் 19, 2021, 2:00 காலை திங்கட்கிழமை
More

  பிரதமர் மோடியைப் பாராட்டிய ‘பலுசிஸ்தான் ஆதரவாளர்’ கனடாவில் மர்ம மரணம்!

  பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடிய பலூச் ஆர்வலர் கரிமா பலூச் கனடாவின் டொராண்டோ நகரில் இறந்து கிடந்தார்


  karima-balooch
  karima-balooch

  ஒருமுறை பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடிய பலூச் ஆர்வலர் கரிமா பலூச் கனடாவின் டொராண்டோ நகரில் இறந்து கிடந்தார்

  பலூச்சிஸ்தான் போஸ்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, பலூச் ஆர்வலர் கரிமா பலோச் கனடாவின் டொராண்டோ நகரில் உயிரிழந்து கிடந்தார். அவர் 2016 ல் பாகிஸ்தானில் இருந்து தப்பித்த பின்னர் அகதியாக கனடாவில் வசித்து வருகிறார்.

  கரீமா பலூச் பாகிஸ்தான் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தவர். பலுசிஸ்தானில் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களை வெளிக்காட்டுவதில் தீவிரமாகப் பணியாற்றினார். மேலும், பலூச் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடுவதில் முன்னணியில் நின்றார்.

  பாகிஸ்தானில் உள்ள சட்ட அமைப்பு மற்றும் மதக் குழுக்கள் பெண்களை வேண்டுமென்றே குறிவைத்து இயங்குவதில், மாநில மற்றும் அரசாங்க இயந்திரங்களை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதை இது எடுத்துக்காட்டுவதாகக் கருதப் படுகிறது.
   
  கடந்த 2016இல் ரக்ஷா பந்தன் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டி வீடியோ வெளியிட்டார். மேலும், பலூசிஸ்தானில் அங்கு வாழும் மக்களின் அவல நிலையைப் பார்க்கும்படி அவரிடம் வேண்டுகோள் விடுத்தார். இதை அடுத்து, அவர் இந்தியாவில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றார்.
   
  ‘ரக்ஷா பந்தன்’ குறித்துச் சொல்லி, பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்தியதுடன், பலுசிஸ்தானில் வாழும் மக்களின் அவல நிலையை மாற்றுவதற்காக அவரது உதவியை நாடினார், 2016 ஆம் ஆண்டில். பிரதமர் மோடியை அவர்களின் போராட்டத்தின் குரலாக இருக்குமாறு அவர் வலியுறுத்தினார்.
   
  பிரதமர் மோடிக்கு கரிமா பலூச் அனுப்பிய செய்தியில், “இந்த நாளில் நான் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன், நாங்கள் உங்களை எங்கள் சகோதரராகக் கருதுகிறோம் என்று கூற விரும்புகிறேன், மேலும் நீங்கள் பலூச் இனப்படுகொலை, பலூசிஸ்தானில் நிகழும் போர்க்குற்றங்கள் ஆகியவற்றை வெளிக்கொணரும் மனிதனின் குரலாக உங்களது மாறும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்! மேலும், சர்வதேச மன்றங்களில் பலூச் மக்களின் உரிமை, பலூச் சகோதரர்களைக் காணவில்லை என்று கூக்குரல் எழுப்பும் அந்த சகோதரிகளின் குரலாக உங்களது குரல் ஒலிக்க வேண்டும் ” என்று குறிப்பிட்டிருந்தார்.
   
  கரீமா பலூச் இறுதியாக டிசம்பர் 20 ஆம் தேதி டொராண்டோவின் பே ஸ்ட்ரீட் மற்றும் குயின்ஸ் க்வே வெஸ்ட் பகுதியில் காணப்பட்டதாகவும், அவரைக் கண்டுபிடிப்பதில் பொதுமக்கள் உதவியை டொராண்டோ போலீசார் நாடியதாகத் தெரிவித்ததாகவும் தி பலூசிஸ்தான் போஸ்ட் தெரிவித்துள்ளது.

  கரீமா பலூச்சின் குடும்பத்தினரிடம் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டு ஒப்படைக்கப் பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
   
  பாகிஸ்தான் அரசு மற்றும் அந்நாட்டு ராணுவ அட்டூழியங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து பலூசிஸ்தான் செய்தி வெளியிட்டுள்ளது. வளம் நிறைந்த மாகாணம். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கிளர்ச்சியால் பீடிக்கப்பட்டுள்ளது.
  பலோச் தேசிய இயக்கம் கரிமா பலூச்சிற்கு 40 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப் படும் என்று தெரிவித்துள்ளது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,230FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,114FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »