பிப்ரவரி 25, 2021, 1:11 மணி வியாழக்கிழமை
More

  ஹைதராபாதில் சோனூசூட் பெயரில் உணவகம்! வியாபாரம் அமோகம்!

  Home சற்றுமுன் ஹைதராபாதில் சோனூசூட் பெயரில் உணவகம்! வியாபாரம் அமோகம்!

  ஹைதராபாதில் சோனூசூட் பெயரில் உணவகம்! வியாபாரம் அமோகம்!

  'சைனா பாஸ்ட்புட்' சென்டர் கொரோனா காரணமாக நஷ்டத்தில் ஓடியது. அதன் பெயரை மாற்றி சோனூசூட் சென்டர் என்று மாற்றியபின்

  sonusood
  sonusood
  • ஹைதராபாதில் சோனூசூட் பெயரில் உணவகம். வியாபாரம் அமோகம்.
  • பேகம்பேட்டில் உள்ள சிறிய ஃபாஸ்ட்ஃபுட் சென்டருக்கு சென்ற சோனூசூட். வீடியோ வைரல்.

  ‘சைனா பாஸ்ட்புட்’ சென்டர் கொரோனா காரணமாக நஷ்டத்தில் ஓடியது. அதன் பெயரை மாற்றி சோனூசூட் சென்டர் என்று மாற்றியபின் இப்பொழுது வியாபாரம் படுஜோராக நடக்கிறது. அங்கு சென்று சமையல் செய்த சோனூசூடைப் பார்த்து மகிழ்ந்து போன உள்ளூர் மக்கள்.

  கொரோனா பரவலின் போது ஏழைகளுக்கு உதவி புரிந்த உயர்ந்த மனதைக் கொண்ட சினிமா நடிகர் சோனுசூடுக்கு பல இடங்களில் சிலை வைத்து கோவில் கட்டி வழிபாடு நடக்கிறது. சிலர் தம் கடைகளுக்கு சோனூசூட் பெயரைச் சூட்டி உள்ளார்கள். சிலர் தம் பிறந்த குழந்தைகளுக்கு அவர் பெயரைச் சூட்டி மகிழ்கிறார்கள்.

  sonusood1
  sonusood1

  ஹைதராபாத் பேகம்பேட்டில் ஒருவர் சோனூசூட் பாஸ்ட் ஃபூட் சென்டர் என்ற பெயரில் சிறிய உணவகம் நடத்துகிறார். அந்த ஃபாஸ்ட் புட் சென்டருக்கு சோனூசூட் சர்ப்ரைஸ் விசிட் செய்தார். உணவகத்தின் முதலாளியுடன் அங்கிருந்தவர்கள் அனைவரும் சோனூசூடைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.

  இதற்கு முன்னர் அதற்கு சைனா ஃபாஸ்ட ஃபுட் சென்ட்ர் என்ற பெயர் இருந்தது. சைனா என்ற பெயர் இருந்ததால் கொரோனா பின்னணியில் அவருடைய வருமானம் விழுந்து விட்டது.

  sonusood2
  sonusood2

  அதே நேரத்தில் ஏழைகளுக்கு உதவி புரிந்து ரியல் ஹீரோவாக பெயர்பெற்ற சோனூசூடின் பெயரை சென்டருக்கு வைத்தார். அதனால் அவருக்கு மீண்டும் கிராக்கி அதிகம் ஆகி வியாபாரம் பன்மடங்கு பெருகியது. சோஷல் மீடியாக்கள் மூலம் இந்த விஷயத்தை சோனூசூட் அறிந்து கொண்டு அங்கு சென்று அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்.

  அந்த பாஸ்ட்புட் சென்டரில் அவருக்குப் பிரியமான ஃப்ரைட் ரைஸ், மன்சூரியன் உணவுகளை உண்டு மிகவும் நன்றாக இருப்பதாகக் கூறி மகிழ்ந்தார். அங்கு சில உணவுகளை கிண்டிக் கிளறி வந்திருந்த ரசிகர்களை மகிழ்வித்தார்.

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari