Home அடடே... அப்படியா? விஜய், சிம்பு கோரிக்கையை ஏற்ற அரசு; திரையரங்குகளில் 100 சத இருக்கைகளுக்கு அனுமதி!

விஜய், சிம்பு கோரிக்கையை ஏற்ற அரசு; திரையரங்குகளில் 100 சத இருக்கைகளுக்கு அனுமதி!

simbu
simbu

நடிகர்கள் விஜய், சிம்பு ஆகியோரின் கோரிக்கையை ஏற்று, திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்கிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

கொரானோ கால ஊரடங்கு காரணமாக சினிமா திரையரங்குகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்டன. பின்னர், தீபாவளியை முன்னிட்டு, தமிழகத்தில் நவம்பர் 10ஆம் தேதி முதல் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும்தான் அனுமதி வழங்கப்பட்டது.

பின்னர், டிசம்பரில் 75 சதவீதம், ஜனவரியில் 100 சதவீதம் என மாற்ற வேண்டும் என திரையரங்கு அதிபர்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் 50 சதவீத நிலையிலிருந்து அதை மாற்றும் உத்தரவை அரசு வெளியிடவில்லை.

இந்நிலையில், நடிகர் விஜய், தனது படமான மாஸ்டர் வெளியாகும் நிலையில், தமிழக முதல்வரைச் சந்தித்து 100 சதவீத இருக்கைக்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார். அதேபோல், தனது படமான ஈஸ்வரன் வெளியாகும் நிலையில், நடிகர் சிம்புவும் இந்தக் கோரிக்கையை முன்வைத்து கடிதம் எழுதினார்.

சிம்பு எழுதிய கடிதம்…

Simbu letter1
Simbu letter 2

ஜன.13ஆம் தேதி விஜய் நடித்த மாஸ்டர் படமும், ஜன. 14ஆம் தேதி சிம்புவின் ஈஸ்வரன் படமும் வெளியாகிறது. எனவே, அதற்குள் மேற்படி கோரிக்கைக்கு இணங்கி, அரசு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இன்று திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. இதை அடுத்து திரையரங்கு உரிமையாளர்கள், சிம்பு, விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

1 COMMENT

  1. திரையரங்குகளில் நூறுசதவீதப் பார்வையாளர்களை அனுமதிக்க அரசு இவ்வளவு அவசரப் பட்டிருக்கக் கூடாது. விளைவுகள் தாங்க முடியாதானால் சிம்புவும் விஜய்யுமா வந்து காப்பாற்றப் போகிறார்கள்.

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version