
இன்று ‘தண்ணீர் பாம்பை’ ஓணான் என்று கூறினார் ஸ்டாலின்.
திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் தொகுதிக்குட்பட்ட அவளிநல்லூர் ஊராட்சி’யில் தி.மு.க கூட்டம் “கிராம சபை கூட்டம் ” என்ற பெயரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசனார்.
அப்பொழுது கூட்டத்தில் விஷமில்லா தண்ணீர் பாம்பு புகுந்ததால் மகளிர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது,
உடனே சில பெண்கள் கூச்சலிட்டனர். அப்பொழுது அங்கு பேசிக்கொண்டிருந்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் “ஓணான்” என கூறினார். உடனே பாம்பு புகுந்தததால் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
உடனே அந்த பாம்பை அங்கிருந்த பாதுகாவலர்கள் அடித்து வெளியில் போட்டனர். இதனால் சிறுது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.