
பூந்தமல்லி அருகே ஓட்டல் அறையில் நிர்வாணமாக கேரள மாநிலத்து இளைஞர் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சாஜின் (40), கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலை விஷயமாக சென்னை வந்தவர் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கி வந்தார்.
நேற்று முன்தினம் அறைக்குள் சென்றவர் இன்று வரை அறையிலிருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் அறை கதவை தட்டியும் திறக்காததால் நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஓட்டல் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வாயில் நுரை தள்ளியபடி நிர்வாணமாக சாஜின் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கடைசியாக அவரது அறைக்கு ஒரு பெண் வந்து சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் இவர் நிர்வாணமாக படுக்கையில் இறந்து இருப்பதால் தற்கொலை செய்து கொண்டாரா? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? தற்கொலைக்கான காரணம் என்ன? அல்லது விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் நசரத்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஏதேனும் பெண்ணுடன் தவறான சகவாசம் காரணமாக பிரச்சினை ஏற்பட்டு இறந்தாரா? இல்லை அந்த பெண் விலை மாதுவா என்பது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த பெண் யார் என்பது குறித்து ஹோட்டல் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆராய்ந்து வருகிறார்கள்.