June 23, 2021, 11:49 am
More

  ARTICLE - SECTIONS

  கமல் நிரந்தர நடிகராக நமக்கு என்றும் வேண்டும்! தேர்தல் களத்தை அவர் சூட்டிங்க் ஸ்பாட் போல் நினைக்கிறார்!

  அழகிரி கூடவே பிறந்தவர் கூடவே வளர்ந்தவர் தம்பிக்கு என்ன திறமை உள்ளது என்பதை முகவரி தெரிவித்துவிட்டார் !

  sellur-raju
  sellur-raju

  நடிகர் கமல்ஹாசன் நிரந்தர நடிகராக நமக்கு என்றும் வேண்டும், தேர்தல் களத்தை அவர் சூட்டிங்க் ஸ்பாட் போல நினைக்கிறார்:
  செல்லூர் ராஜூ!

  மதுரை: தம்பியின் திறமை அண்ணனுக்கு தானே தெரியும் முதல்-அமைச்சராக வர முடியாது என்ற அவருடைய திறமையை அவருடைய அண்ணன் அழகிரியே சொல்லிவிட்டார் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜ் மதுரையில் பேட்டியில் குறிப்பிட்டார்.

  மதுரை செயின்ட் மேரிஸ் பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி விட்டு, செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில்,
  அமித்ஷா துக்ளக் நிகழ்ச்சிக்காக சென்னை வருகிறார். அப்போது கூட்டணி பற்றி பேசுவாரா என்பது எனக்கு தெரியவில்லை. அதை அவரிடம் தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

  டோக்கன் என்பது எப்பொழுது எந்த தேதிக்கு வரவேண்டும் என்பதற்காக மட்டுமே வழங்கப்பட்டு வருகிறதே தவிர டோக்கன் இருந்தால்தான் பொங்கல் பரிசு வழங்கும் என்பது தவறான ஒன்று.

  2009. 2010ல் இருந்து திமுக எந்தவித பொங்கல்பரிசு தரவில்லை பின்பு தேர்தல் வருகிற பொழுது பொங்கல் பரிசு தந்தார்கள். திமுக அதில் அரை கிலோ அரிசி அரை கிலோ மண்டவெள்ளம் உள்ளிட்ட பொருட்கள் மட்டும் கொடுக்கப்பட்டது ரூபாய் எல்லாம் வழங்கப்படவில்லை.

  பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது வெறும் 80 கோடி ரூபாய் மட்டுமே ஆனால் நாங்கள் எங்களது அதிமுக அரசின் சார்பாக வழங்குவதில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

  திமுக கொடுத்த பரிசுப் பொருளில் உதயசூரியன் சின்னத்தை வைத்து விட்டார்கள். ஆனால் நாங்கள் இரட்டை இலையையும் எங்களது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டோ வைக்க வில்லை.

  கமலஹாசன் தேர்தல் வரை பேசிக் கொண்டிருப்பார் இதுவும் ஒரு படப்பிடிப்பு என நினைத்துக் கொண்டிருக்கிறார் அவரைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்து விட்டாலே போதுமானது. உலகமே போற்றும் ஒரு நடிகராக அவர் நமக்குத் தேவை.

  எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் எதையுமே நன்மையாக சொன்னது கிடையாது. 9 தெருமுனைப் பிரச்சாரங்கள் இதுவரை செய்துள்ளோம். எல்லா இடங்களிலும் மக்கள் எழுச்சியாக உள்ளார்கள் தொண்டர்களும் அதைக் காட்டிலும் எழுச்சியாக உள்ளார்கள். இந்த எழுச்சியை பார்க்கிற பொழுது நிச்சயமாக வருகிற சட்டமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.

  நீங்களும் நானும் வெளியில் இருந்துதான் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பார்த்து வருகிறோம் ஆனால் அழகிரி கூடவே பிறந்தவர் கூடவே வளர்ந்தவர் தம்பிக்கு என்ன திறமை உள்ளது என்பதை முகவரி தெரிவித்துவிட்டார் ! கூடப்பிறந்த அண்ணக்குக்தானே தெரியும் … என்ன திறமை உண்டு தம்பிக்கு என்று.

  எல்லா மதத்தினரும் அதிமுகதான் வரும் என்று நினைக்கிறார்கள். சிறுபான்மையினர் கூட முதலமைச்சர் அனைவரையும் சந்தித்து வருகிறார். பல்வேறு தொழிலதிபர்களின் சந்தித்து வருகிறார் அதன் நிச்சயமாக தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என தெரிவித்தார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  [orc]

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  24FollowersFollow
  74FollowersFollow
  1,262FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-